/indian-express-tamil/media/media_files/fQ1UMf4QZmsJ2eSII8A0.jpg)
தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் இந்தத் துறையின் நிபுணர்கள் நீட் யு.ஜி 2025 தேர்வின் கேள்விகள் முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் கடினமாக இருந்தன என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
நீட் யு.ஜி 2025 தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், நீட் வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமானதாக இருந்ததால் மொத்தத்தில் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் குறையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய தேர்வு முகமை (NTA) ஞாயிற்றுக்கிழமை (மே 4) 22.7 லட்சம் மருத்துவ தேர்வர்களுக்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளநிலை (நீட் யு.ஜி - NEET UG) தேர்வை நடத்தியது. தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் இந்தத் துறையின் நிபுணர்கள் நீட் யு.ஜி 2025 தேர்வின் கேள்விகள் முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் கடினமாக இருந்தன என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், நீட் யு.ஜி 2025 தேர்வு குறித்தும் கேள்விகள் எப்படி இருந்தன, மாணவர்களின் கருத்து என்ன, இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்பது குறித்தும் Biology Simplified Tamil என்ற யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள், இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் இயற்பியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமானதாக இருந்தன என்று கருத்து தெரிவித்துள்ளதாக Biology Simplified Tamil யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். மேலும், நிபுணர்களின் கருத்தும் இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் நீட் தேர்வில் வேதியியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல் ஓரளவு மிதமாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே போல, உயிரியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தாலும் சில கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் அதைப் புரிந்துகொண்டு அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தாலும் சுற்றிவளைத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், நீட் யு.ஜி 2025 தேர்வு வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாகவும் வேதியியல் பாடப்பிரிவு கேள்விகள் ஓரளவு மிதமாகவும் இருந்தன என்று மாணவர்கள், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், உயிரியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தாலும் சில கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.
நீட் யு.ஜி 2025 தேர்வு வினாத்தாள் கோவிட்டுக்கு முந்தைய 2019-ம் ஆண்டு வினாத்தாள் போல கடினமாக இருந்தன. அதனால், இந்த 2025-ம் ஆண்டு யு.ஜி நீட் தேர்வில், நிறைய பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுப்பது கடினம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும் 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதனால், இந்த ஆண்டு நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் கனிசமாகக் குறையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.