தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு; 92.5% பிரிவில் கூடுதலாக 167 இடங்கள்; கட் ஆஃப் குறைய வாய்ப்பு
Tamil Nadu MBBS BDS Admission: மருத்துவ கலந்தாய்வின் 92.5% பொது பிரிவுக்கு கூடுதலாக 167 இடங்கள் சேர்ப்பு; கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர் கணிப்பு
Tamil Nadu MBBS BDS Admission: மருத்துவ கலந்தாய்வின் 92.5% பொது பிரிவுக்கு கூடுதலாக 167 இடங்கள் சேர்ப்பு; கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர் கணிப்பு
தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வின் பொது கலந்தாய்வில் கூடுதலாக 167 இடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கட் ஆஃப் மேலும் குறையும் என நிபுணர் கணித்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 29 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 92.5% பொது கவுன்சலிங்கில் கூடுதலாக 167 இடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.
தமிழக மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி பிரிவில் நிரப்பப்படாத இடங்கள் பொது கலந்தாய்வுக்கு மாற்றப்படும். இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் 56 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் 56 பேருக்கும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
அதேநேரம் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மொத்தமாக 223 இடங்கள் உள்ளன. ஆனால் 56 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளதால், 167 இடங்கள் பொது கலந்தாய்வுக்கு மாற்றப்படும். அதாவது 92.5% கவுன்சலிங்கிற்கு மாற்றப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
இதனால் கட் ஆஃப் சிறிய அளவில் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.