2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான நீட் தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு இன்னும் நடக்காத நிலையில், கட் ஆஃப் குறித்து பேசுவது, மாணவர்கள் எந்த அளவிற்கு தயாராக வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் விதத்திலே கட் ஆஃப் என்ன என்று கூறப்படுகிறது.
Advertisment
Advertisement
தேர்வு எப்படி இருக்கும், வினாத்தாளின் கடினத்தன்மை, எத்தனை பேர் விண்ணப்பிப்பார்கள், எவ்வளவு பேர் எழுதுவார்கள் என்பதை எல்லாம் பொறுத்து கட் ஆஃப் மாறும். கட் ஆஃப் என்னவாக இருந்தாலும், நீங்கள் முதலில் பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடிக்க வேண்டும். மேலும் உங்கள் குறிக்கோள் 720 மதிப்பெண்ணாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப்பிரிவு – 650
பி.சி – 618
பி.சி.எம் – 611
எம்.பி.சி – 602
எஸ்.சி – 530
எஸ்.சி.ஏ – 463
எஸ்.டி – 477
அரசு மருத்துவ கல்லூரிகள் 2025 ஆம் ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் நிலவரம்