/indian-express-tamil/media/media_files/2025/05/06/QbhXwcj1XOWaLD6LZjle.jpg)
NEET UG 2025: 95 முதல் 120 மார்க் வரை கட் ஆஃப் குறையும் - கல்வியாளர் அஸ்வின் தகவல்
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5453 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 720. இந்தநிலையில், நீட் தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இயற்பியல் பிரிவில் கேள்விகள் கடினமானதாக இருந்ததாகவும், வேதியியலில் கேள்விகள் நீளமானதாக இருந்ததகாவும் தேர்வர்கள் தெரிவித்திருந்தனர். வேதியியல் சமன்பாடுகள் மற்றும் கணக்கீடுகள் அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதால், 180 கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நீட் தேர்வு வினாத்தாளின் கடினத்தன்மையை தேசிய தேர்வு முகமை, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு மாற்றியுள்ளதாகவும், இதனால் தேர்வர்களின் மதிப்பெண்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 95 முதல் 120 மதிப்பெண்கள் வரை குறையலாம் என்றும் கல்வியாளர் அஸ்வின் கணிக்கின்றார். மேலும், 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் கூறுகிறார். அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்து கெரியர் கைடென்ஸ் அஸ்வின் என்ற யூடியூப் சேனலில், கல்வியாளர் அஸ்வின் கூறிய தகவல்களை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடுவது எப்படி?
பரபரப்புக்கு பஞ்சமின்றி நீட் தேர்வு முடிந்த நிலையில், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணாக எவ்வளவு இருக்கும் என்பதே தற்போது மாணவர்களின் பிரதான கேள்வி ஆக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS, BDS, AYUSH, BVSc, BSc Nursing போன்ற படிப்புகளில் அட்மிஷன்பெற கட்-ஆப் மதிப்பெண்களே அடிப்படையாகும். கேள்வித் தாளின் கடினத்தன்மை, தேர்வர்களின் எண்ணிக்கை, இடஒதுக்கீடு முறைகள், மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள், வரும் ஜுன் மாதம் வெளியாகவுள்ள தேர்வு முடிவின் போது அறிவிக்கப்படும். ஆனால், வல்லுநர்கள் தற்போதே அதை கணக்கிட தொடங்கி விட்டனர்.
நீட் 2025 - எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மார்க்?
கல்வியாளர்களின் கணிப்பின்படி, நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 500 முதல் 525ஆக இருக்கலாம். கடந்த ஆண்டு இது 620 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்களாக கல்வியாளர் அஸ்வின் கணித்து இருப்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரிவு | 2024 கட்-ஆஃப் | எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் |
BC | 620 | 500-525 |
MBC | 603 | 480-510 |
SC | 536 | 416-440 |
ST | 488 | 330-380 |
OC | 651 | 535-555 |
BCM | 612 | 490-515 |
SCA | 463 | 340-370 |
நன்றி: Career Guidance ASHWIN
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.