நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், எதிர்மறை மதிப்பெண் எனப்படும் நெகட்டிவ் மதிப்பெண்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும் நிலையில், இதில் எதிர்மறை மதிப்பெண் எனப்படும் நெகட்டிவ் மார்க் உண்டு. அதாவது ஒரு சரியான கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான கேள்விக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். பதிலளிக்காத கேள்விக்கு மதிப்பெண் கழிக்கப்படாது.
நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் மாணவர்கள் கவனமாக விடைகளை நிரப்ப வேண்டும். தவறான விடைகளை தேர்வு செய்தால், நீங்கள் சரியான விடைக்கு பெற்ற மதிப்பெண்களில் இருந்து, தவறான விடைக்கான மதிப்பெண் கழிக்கப்படும்.
Advertisment
Advertisements
இந்தநிலையில், நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்களை தவிர்ப்பது எப்படி என பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி,
தேர்வின்போது பயம், பதற்றம், தடுமாற்றம் இருக்கக் கூடாது. ஒரு கேள்வி அல்லது ஒரே பிரிவுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்த கேள்விகளை முயற்சி செய்து, நேரம் இருப்பின் பின்னர் தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சி செய்யுங்கள்.
தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எலிமினேஷன் முறையை முயற்சி செய்யுங்கள். அடுத்ததாக உறுதியாக 100% சரி எனத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் முதலில் விடையளியுங்கள். கடைசி அரை மணி நேரத்தில் தெரியாத கேள்விகளை முயற்சி செய்யுங்கள். அப்போது கடந்த ஆண்டில் அல்லது இப்போது எதிர்ப்பார்க்கப்படும் உங்கள் பிரிவுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறும் அளவிற்கு நீங்கள் விடையளித்திருந்தால், தெரியாத கேள்விகளை முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் முயற்சி செய்ய வேண்டாம். அதாவது 550 முதல் 600 மதிப்பெண்கள் கிடைக்கும் எனத் தெரிந்தால் மட்டும், தெரியாத கேள்விகளை முயற்சி செய்யுங்கள்.