நீட் தேர்வில் முக்கிய பாடமான உயிரியலில் 360 மதிப்பெண்களுக்கு 360 எடுக்க எப்படி படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டில் எண்ணிக்கை அதையும் தாண்டும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். உயிரியலில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். அந்த வகையில் 4 பாடங்களில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் என்ற வகையில், உயிரியலில் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பிரிவை விட உயிரியியல் பகுதி எளிதானதாக இருக்கும். ஏனெனில் உயிரியியல் பிரிவில் பெரும்பாலும் நேரடி கேள்விகள் இடம்பெறும். இதனால் பெரும்பாலான மாணவர்கள் இந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு மதிப்பெண்களை பெற விரும்புவர்.
Advertisment
Advertisement
இந்தநிலையில், உயிரியியல் பிரிவில் முழுமையான மதிப்பெண்களைப் பெறுவதற்கான டிப்ஸ்கள் பயாலஜி சிம்பிளிஃபைடு சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தகங்களை அப்படியே முதலில் படிக்காதீர்கள். முதலில் கருத்துக்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனை வகுப்பறை அல்லது வீடியோக்கள் மூலம் புரிந்துக் கொள்ளுங்கள். வகுப்பறையில் குறிப்பு எடுப்பது அவசியம். அடுத்ததாக என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். அப்படி படித்து கான்செப்ட்களை புரிந்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக நீங்களாகவே கேள்விகளை உருவாக்குங்கள். மேலும் ஒரு வரி தகவல்களை அதிகமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். படித்த அனைத்தையும் நீண்ட காலத்திற்கு ஞாபகம் வைத்துக் கொள்ள வினாத்தாள்களை பயிற்சி செய்யுங்கள். படங்களை கண்டிப்பாக கவனியுங்கள். மேலும் படங்களுக்கு கீழ் உள்ள குறிப்புகளையும் கவனமாக படித்துக் கொள்ளுங்கள். இப்படி படிப்பதன் மூலம் உயிரியலில் முழுமையான மதிப்பெண்களை எடுக்கலாம்.