இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறையை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) இன்று (ஜூலை 21) தொடங்கியுள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் உள்ள டாப் 20 மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), பி.எஸ்.சி (B.sc.) நர்சிங் ஆகிய இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கவுன்சலிங் செயல்முறை தொடங்கியுள்ளது. தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (NEET UG 2025) தகுதி பெற்று விண்ணப்பித்தவர்கள் இந்த கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ளலாம். நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பல மாணவர்கள் ஏற்கனவே தங்கள் சேர விரும்பும் நிறுவனங்களை சேர்க்கைக்காகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும், இருப்பினும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை 2024 இன் படி வரிசையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் டாப் கல்லூரிகள் உலகளாவிய தரவரிசையிலும் இடம்பெற்றுள்ளன. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் மதிப்பீடு அடிப்படையிலும் இந்த கல்லூரிகள் சிறந்த இடங்களில் உள்ளன.
1). அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), டெல்லி
2). முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர்
3). கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, (CMC), வேலூர்
4). தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS), பெங்களூரு
5). ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), புதுச்சேரி
6). சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGIMS), லக்னோ
7). பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), வாரணாசி
8). அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
9). கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால்
10). சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை
11). டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீடம், புனே
12). சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை
13). ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
14). எய்ம்ஸ், ரிஷிகேஷ்
15). எய்ம்ஸ், புவனேஸ்வர்
16). எய்ம்ஸ், ஜோத்பூர்
17). வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி & சஃப்தர்ஜங் மருத்துவமனை, புது தில்லி
18). எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
19). கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (KGMU), லக்னோ
20). ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை