நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதாரில் செய்ய வேண்டிய முக்கிய அம்சம் குறித்து இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் ஆதார் கார்டில், உங்கள் பெயர் உங்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது இருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
ஏனெனில் நீட் தேர்வு விண்ணப்பத்தின்போது நீங்கள் பதிவேற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அப்போது வித்தியாசம் இருப்பின் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தேர்வின்போது ஆதார் அடையாள அட்டை சரிபார்க்கப்படும். ஹால் டிக்கெட்டிலும், ஆதாரிலும் பெயர் வித்தியாசம் இருந்தால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க ஆதாரில் இப்போதே, திருத்தம் செய்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இப்போதே செய்யும்போது ஆதாரில் அப்டேட் ஆகி புதிய ஆதார் வர ஒரு மாதம் கூட ஆகலாம். இப்போதே செய்துக் கொண்டால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சிக்கலின்றி விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்களில் பெயரின் முன்னாடியும் பின்னாடியும் இன்ஷியல் மாறியிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. பெயருக்கு பின்னால் தந்தை பெயர் இருந்தாலும் பிரச்சனையும் இல்லை. தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.
தந்தை, தாய் பெயரின் இனிஷியல்களை வைத்திருப்பவர்கள், ஒரே ஆர்டரில் அனைத்து சான்றிதழ்களிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆதாரில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சான்றிதழ்களில் பெயரின் எழுத்துக்களில் வேறுபாடு இருந்தால் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.