NEET UG 2025: நீட் தேர்வில் முக்கிய மாற்றங்கள்; கட் ஆஃப் குறைய வாய்ப்பு
செக்சன் பி நீக்கம், தேர்வு நேரம் குறைப்பு; நீட் தேர்வில் முக்கிய மாற்றங்களை அறிவித்த தேசிய தேர்வு முகமை; கட் ஆஃப் கணிசமாக குறைய வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து
2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நெருங்கி வரும் நிலையில், தேசிய தேர்வு முகமை முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இதனால் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisment
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், 2025 நீட் தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கங்கள் பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இருந்த நிலையில், தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் கேள்விகளின் எண்ணிக்கை 200 இலிருந்து 180 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது செக்சன் பி நீக்கப்பட்டுள்ளது. அதாவது 15 கேள்விகள் கேட்கப்பட்டு அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற செக்சன் பி நீக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் இடம்பெறும். அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிக்கும் வகையில், விருப்பத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. மைனஸ் மார்க் உண்டு என்பதால், உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கவும். இந்த மாற்றங்களால் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.