நீட் யு.ஜி தேர்வு 2025-க்கான சிலபஸை தேசிய தேர்வு முகமை மற்றும் என்.எம்.சி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு சென்று செக் செய்யலாம். இயற்பியல், வேதியல், பையோலஜி பாடப்பிரிவுகளுக்கு தனித் தனியாக சிலபஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 பாடத்தில் 2024 சிலபஸ் அப்படியே உள்ளது.
நீட் தேர்வை புதிதாக படித்து எழுதுபவர்களும் தேர்வாகலாம். கடந்த முறை சீட் முடிந்து போன மார்க்கை விட அதிகம் எடுக்க வேண்டும். அது தான் டாக்கெட் ஆக இருக்க வேண்டும். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி என உங்கள் சமூக வாரியாக இடக் ஒதுக்கீடு இருக்கும். அதற்கான மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ சீட் அதிகரிக்கப்படும் போது கட்-ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. எப்பவும் அதிக மதிப்பெண்ணை கட்-ஆப் ஆக வைத்து படியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“