தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG)க்கான பாடத்திட்டத்தை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நீட் பாடத்திட்டத்தை தெரிந்துக் கொள்ள neet.nta.nic.in மற்றும் nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிட வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2025: Official websites to check syllabus
2024 தேர்வுக்கு, நீட் தேர்வு விண்ணப்பப் படிவம், தகவல் புல்லட்டின், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகியவை neet.ntaonline.in, exams.nta.ac.in/NEET/ மற்றும் nta.ac.in ஆகிய இணையதளங்களில் கிடைத்தன.
நீட் தேர்வு பாடத்திட்டத்தில் நான்கு பாடங்கள் உள்ளன - இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல். தேசிய மருத்துவ ஆணையம் (NMC) டிசம்பர் 17 அன்று 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான பாட வாரியான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. நீட் பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேசிய மருத்துவ ஆணைய இணையதளம் - nmc.org.in அல்லது நீட் அதிகாரப்பூர்வ இணையதளம் - neet.nta.nic.in.
நீட் தேர்வு பாடத்திட்டத்தை வெளியிட்டு, டிசம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட தேசிய தேர்வு முகமை அதன் அறிவிப்பில், "தேசிய மருத்துவ ஆணையத்தால் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை கண்டிப்பாக நீட் 2025 தேர்வை நடத்தும் என்பதை தெளிவுபடுத்துவதற்காக பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.
நீட் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய பிற விவரங்களுக்கு பதிலளிக்கப்பட்ட தகவல் சிற்றேடு இன்னும் பதிவேற்றப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“