2025 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும்? தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இந்தியாவில் மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் தகுதிப் பெறுவது அவசியம். அந்தவகையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET UG 2025) வருடந்தோறும் லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதி வருகின்றனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களுக்கு 20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
சவாலான போட்டித் தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்கள். இருப்பினும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களோடு, கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதிப் பெற்று மருத்துவ இடத்தை பெற முடியாதவர்களும் வருகின்ற நீட் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் என்பதை இப்போது பார்ப்போம். இதனை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.
Advertisment
Advertisement
சென்ற வருடம் பிப்ரவரி 9 ஆம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இறுதி தேதியாக மார்ச் 9 அறிவிக்கப்பட்டது. மேலும் நீட் தேர்வு மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 7 ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கலாம். இந்தத் தேதி கடந்த கால போக்குகளின் படி கூறப்படுகிறது. இருப்பினும் தேதியில் மாற்றம் இருக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு தேவையான ஆவணங்கள்
1). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (புதிய மாணவர்களுக்கு தேவையில்லை)