2025 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் தகுதிப் பெறுவது அவசியம். அந்தவகையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET UG 2025) வருடந்தோறும் லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதி வருகின்றனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களுக்கு 20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
சவாலான போட்டித் தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்கள். இருப்பினும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களோடு, கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதிப் பெற்று மருத்துவ இடத்தை பெற முடியாதவர்களும் வருகின்ற நீட் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் நீட் தேர்வு ஓ.எம்.ஆர் தாள் அடிப்படையில், ஒரே ஷிப்ட்டாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் அப்டேட் செய்துக் கொள்ளவும், APAAR ID உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு தேவையான ஆவணங்கள்
1). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (புதிய மாணவர்களுக்கு தேவையில்லை)
3). சாதி சான்றிதழ்
4) ஆதார் அட்டை
5). பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
6). அஞ்சல் அட்டை அளவு புகைப்படம்
7). கையொப்பம்
8). கைவிரல் ரேகை