தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) விண்ணப்பங்களை விரைவில் தொடங்கும் தேசிய தேர்வு முகமை (NTA) விண்ணப்பத்திற்கு APAAR ஐ.டி கட்டாயமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், கிடைக்கக்கூடிய பிற வழிகளைப் பயன்படுத்தி நீட் தேர்வுக்கு தொடர்ந்து பதிவு செய்யலாம், இது பற்றிய விவரங்கள் விரைவில் தகவல் புல்லட்டினில் கிடைக்கும், என்று தேசிய தேர்வு முகமை கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2025 Registration: Is APAAR ID mandatory for application?
நீட் தேர்வு இந்த ஆண்டு பேனா மற்றும் பேப்பர் முறையில் ஒரே ஷிப்டில் நடைபெறும். அதேநேரம் நீட் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேசிய தேர்வு முகமை விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவும், APAAR ஐ.டி.,யை ஒருங்கிணைக்கவும் கேட்டுக் கொண்டது. APAAR ஐ.டி (முன்பு அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் அல்லது ஏ.பி.சி ஐ.டி என அழைக்கப்பட்டது) மாணவர்களின் கல்வி விபரங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து, அவர்களின் கல்விப் பயணத்தின் விரிவான பதிவை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான கூடுதல் தெளிவுக்கு, விண்ணப்பதாரர்கள் 011-40759000 அல்லது neetug2025@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளம் neet.nta.nic.in.
இருப்பினும், வீடியோ டுடோரியலுடன் APAAR ஐ.டி.,யை உருவாக்குவதில் விண்ணப்பதாரர்களுக்கு உதவ, படிப்படியான பயனர் வழிகாட்டியை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது. இந்த ஆதாரங்களைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் - apaar.education.gov.in.