/indian-express-tamil/media/media_files/2025/06/14/1XqPXuHhKLLGNSjsUTjQ.jpg)
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் 2025-ன் இறுதி விடை குறிப்புகளையும், தேர்வு முடிவுகளையும் தேசிய தேர்வு முகமை (NTA) இன்று (ஜூன் 14, 2025) வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள், neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்களது முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு நீட் 2025 தேர்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 99.9999547 பர்சன்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
தேர்வெழுதிய மாணவர்கள் neet.nta.nic.in, nta.nic.in மற்றும் exams.nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தங்கள் நீட் யு.ஜி. 2025 தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம். மேலும், UMANG செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் தேர்வு முடிவுகளை காணலாம். முதன்முறையாக, தேசிய தேர்வு முகமை (NTA) நீட் யு.ஜி. 2025 மதிப்பெண் அட்டைகளை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பியுள்ளது.
தகுதி மற்றும் கலந்தாய்வு செயல்முறை:
கலந்தாய்வு செயல்முறைக்கு தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். கடந்த ஆண்டின் போக்குகளின்படி, பொதுப் பிரிவினருக்கான தகுதி பர்சன்டைல் 50% ஆகவும், ஓ.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 40% ஆகவும் இருந்தது. பொது-PwD பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த பர்சன்டைல் மதிப்பெண்கள் ஒப்பீட்டளவிலானவை மற்றும் அகில இந்திய தகுதி பட்டியலில் ஒரு மாணவர் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இந்த பர்சன்டைல்களுக்கு நிகரான உண்மையான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.
-
Jun 14, 2025 15:16 IST
நீட் தேர்வில் டாப் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல்
நீட் தேர்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் உத்கர்ஷ் அவதியா, க்ரிஷாங் ஜோஷி, மிருணால் கிஷோர் ஜா, அவிகா அகர்வால், ஜெனில் வினோத்பாய் பாயணி, கேஷவ் மிட்டல், ஜா பவ்யா சிராஜ், ஹர்ஷ் கெடாவத் மற்றும் ஆரவ் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
Jun 14, 2025 14:48 IST
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்ற மாணவர் தேசிய அளவில் 27-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், அபிநித் நாகராஜ் என்ற மாணவர் தேசிய அளவில் 50-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
Jun 14, 2025 14:44 IST
நீட் தேர்வு - தமிழக மாணவர்களின் தேர்ச்சி விவரம்
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 மாணவர்களில், 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும், 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
-
Jun 14, 2025 14:40 IST
நீட் 2025 கட்-ஆஃப் விவரங்கள்
பொதுப் பிரிவு (UR/EWS) மாணவர்கள்: 2024 ஆம் ஆண்டில் 720-162 ஆக இருந்த கட்-ஆஃப், இந்த ஆண்டு 686-144 ஆகக் குறைந்துள்ளது.
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பொது (UR/EWS) PwBD பிரிவினர்: இவர்களுக்கான கட்-ஆஃப் 143-113 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.சி. PwD, எஸ்.சி. PwD, மற்றும் எஸ்.டி. PwD பிரிவினர்: இவர்களுக்கான கட்-ஆஃப் 126-113 ஆகக் குறைந்துள்ளது.
-
Jun 14, 2025 14:34 IST
தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
நீட் 2025 தேர்வுக்கு மொத்தம் 22,76,069 மாணவர்கள் (9,65,996 ஆண்கள், 13,10,062 பெண்கள் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர்) பதிவு செய்திருந்தனர். இவர்களில், 22,09,318 மாணவர்கள் (9,37,411 ஆண்கள், 12,71,896 பெண்கள் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர்) தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வில் பங்கேற்ற மொத்த மாணவர்களில், 12,36,531 மாணவர்கள் (5,14,063 ஆண்கள், 7,22,462 பெண்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர்) மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
-
Jun 14, 2025 14:31 IST
ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
நீட் 2025 தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் மகேஷ் குமார், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர், 99.9999547 பர்சன்டைல் அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
-
Jun 14, 2025 14:28 IST
தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
தேர்வெழுதிய மாணவர்கள் neet.nta.nic.in, nta.nic.in மற்றும் exams.nta.ac.in ஆகிய அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தங்கள் நீட் யு.ஜி. 2025 தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம். மேலும், UMANG செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் தேர்வு முடிவுகளை காணலாம். முதன்முறையாக, தேசிய தேர்வு முகமை (NTA) நீட் யு.ஜி. 2025 மதிப்பெண் அட்டைகளை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பியுள்ளது.
-
Jun 14, 2025 14:27 IST
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது மதிப்பெண்களை இணையம் வாயிலாக காணலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
📢 NEET (UG) 2025 Results are now LIVE!
— National Testing Agency (@NTA_Exams) June 14, 2025
All candidates are advised to check their email for their scorecards. You can also download your result using your login credentials at 👉 https://t.co/vupfOoDMx9#NEETUG2025 #NEETResult #NTA
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.