NEET UG 2025 Result: நீட் தேர்வு முடிவுகள் 2025 வெளியீடு; கட் ஆஃப் என்ன? இவ்வளவுதானா!

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி விடைக் குறிப்புகள் வெளியான நிலையில் முடிவுகள், தரவரிசை பட்டியல் மற்றும் கட் -ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி விடைக் குறிப்புகள் வெளியான நிலையில் முடிவுகள், தரவரிசை பட்டியல் மற்றும் கட் -ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet-ug-results-2025-cut-off.webp

நீட் தேர்வு முடிவுகள் 2025 வெளியீடு; லிங்க், கட்- ஆஃப் மதிப்பெண்கள் என்ன?

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு 2025-ம் ஆண்டில் மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 22.09 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்களின் இமெயில் முகவரிக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தாண்டு 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Advertisment

நீட் தேர்வு முடிவுகள் 2025: 

இளநிலை நீட் தேர்வு முடிவுகள் neet.nta.nic.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி விடைக் குறிப்புகள் வெளியான நிலையில் முடிவுகள், தரவரிசை பட்டியல் மற்றும் கட் -ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் NEET (UG) 2025 Results Live என இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்து, அதில் மாணவர்களின் விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வோர்டு உள்ளிடவும். தொடர்ந்து, முடிவுகள் திரையில் தோன்றும். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம். மேலும், முடிவுகளை பதிவிறக்கம் செய்தும் வைத்து கொள்ளலாம்.

நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி: நீட் தேர்விற்கு 22,76,069 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 22,09,318 பேர் தேர்வை எழுதினர். இதில் 12,36,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 79,322 பேர் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1,40,158 பேர் பதிவு செய்த நிலையில், 1,35,715 பேர் தேர்வை எழுதினர். இதில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கட் - ஆஃப் மதிப்பெண்கள்: 

கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சம் கட்-ஆஃப் 127 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 113 ஆக குறைந்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான நீட் கட் ஆஃப் 686-144 ஆக குறைந்தது, 2024-ல் 720-162 ஆக இருந்தது. SC, ST மற்றும் OBC வேட்பாளர்களுக்கான கட்-ஆஃப் 2024-ல் 161-127 இலிருந்து 143-113 ஆகக் குறைந்தது.

முதலிடத்தில் ராஜஸ்தான் மாணவன்: முதலிடத்தை 99.9999547 என்ற மதிப்பெண்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவன் மகேஷ் குமார் என்ற மாணவர் பிடித்துள்ளார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவதியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிஷாங் ஜோஷி 2-ம், 3-ம் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடில் முதலிடம் பிடித்த எஸ். சூர்யா நாராயணன்: அகில இந்திய அளவில் 27-வது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் எஸ். சூரிய நாராயணன் என்ற மாணவர் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 99.9987779 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 2-ம் இடத்தை அபினீத் நாகராஜ் என்ற மாணவர் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 50-வது இடத்தை பெற்று சாதித்துள்ளார். மூன்றாம் இடத்தை ஜி.எஸ். புகழேந்தி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 61 இடம் கிடைத்துள்ளது. நான்காவது இடத்தில் கே.எஸ். ஹ்ருதிக் விஜயா ராஜா (63), 5வது இடத்தை ஏ.ஜே. ராகேஷ்(78) பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ இடங்களுக்கு tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெற ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் நேரடியாக ஆன்லைன் வழியாக உடனே மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி, கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்:  தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% இடங்கள் மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரி இடங்கள், இதர மாநிலங்களின் 15% அரசு மருத்துவ இடங்கள் மத்திய அரசின் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இதற்கான விண்ணப்பம் தொடங்கப்படும். MCC வெளியிடும் கலந்தாய்வு அட்டவணை அடிப்படையில் மாநிலங்கள் அளவில் கலந்தாய்வு நடைபெறும்.

Neet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: