/tamil-ie/media/media_files/uploads/2023/06/MBBS.jpg)
நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் (NEET UG) தகுதி பெற வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற கடும் போட்டி நிலவுகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எந்த கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின் படி
2022 ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் நீட் கட் ஆஃப் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆண்டில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டது. இது மாணவர்களின் தீவிர பயிற்சி மற்றும் ஆரோக்கியமான போட்டியை குறிக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு (2024) கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 651
பி.சி – 620
பி.சி.எம் – 612
எம்.பி.சி – 603
எஸ்.சி – 536
எஸ்.சி.ஏ – 463
எஸ்.டி – 488
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 607
பி.சி – 584
பி.சி.எம் – 579
எம்.பி.சி – 574
எஸ்.சி – 494
எஸ்.சி.ஏ – 427
எஸ்.டி – 413
இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களை தேர்வுக்கு முன் கணிப்பது கடினம். தேர்வின் கடினத்தன்மை, மாணவர்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையிலே கட் ஆஃப் மதிப்பெண்களை கணிக்க முடியும். எனவே தேர்வுக்கு முன் கணிப்பது கடினம். ஆனால் கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக எடுக்க வேண்டும் என இலக்கு வைத்து படித்தால் டாக்டர் சீட்டை உறுதி செய்யலாம்.
மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருவதால் இந்த ஆண்டும் கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே கடந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களை விட டார்கெட் அதிகமாக வைத்து படிப்பது சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.