தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இப்போது தெரிந்துக் கொள்வோம்.
Advertisment
எம்.பி.பி.எஸ் என்ற மருத்துவ படிப்பு 12 ஆம் வகுப்பு முடிக்கும் பெரும்பாலானோரின் கனவு. எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பு அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க கடும் போட்டி நிலவுகிறது. காரணம் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவான கட்டணம். எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் கட்டண விபரங்கள் பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்கள் மாநில ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு உதவிபெறும் மருத்துவக் கல்லூரி உள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18,073 ரூபாய் கல்விக் கட்டணமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ. 4.35 – 4.5 லட்சமாகும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் இடங்களுக்கு ரூ.13.5 லட்சம் கல்வி கட்டணமாகும். சுயநிதி பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் கல்வி கட்டணமாக ரூ. 16.2 லட்சம் உள்ளது.
மேற்கூறியவை கல்வி கட்டணம் மட்டுமே, இது தவிர விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் உள்ளிட்டவை கல்லூரிக்கு ஏற்ப மாறுபடும்.