/indian-express-tamil/media/media_files/2025/08/01/mbbs-students-2025-08-01-18-42-48.jpg)
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரவுண்ட் 1 இறுதி கட் ஆஃப் நிலவரம் என்ன? இரண்டாம் சுற்று கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இதில் 7513 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கவுன்சலிங் விரைவில் தொடங்கும்.
இந்தநிலையில், எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் ரவுண்ட் 1 இறுதி கட் ஆஃப் நிலவரம் என்ன? இரண்டாம் சுற்று கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகள் ரவுண்ட் 1 கட் ஆஃப்
பொதுப்பிரிவு - 538
பி.சி - 509
பி.சி.எம் - 504
எம்.பி.சி - 496
எஸ்.சி - 441
எஸ்.சி.ஏ - 397
எஸ்.டி – 402
தனியார் மருத்துவ கல்லூரிகள் ரவுண்ட் 1 கட் ஆஃப்
பொதுப்பிரிவு - 497
பி.சி - 478
பி.சி.எம் - 472
எம்.பி.சி - 475
எஸ்.சி - 414
எஸ்.சி.ஏ - 368
எஸ்.டி - 374
தனியார் பல்கலைக்கழகங்கள் ரவுண்ட் 1 கட் ஆஃப்
பொதுப்பிரிவு - 478
பி.சி - 475
பி.சி.எம் - 470
எம்.பி.சி - 471
எஸ்.சி - 408
எஸ்.சி.ஏ - 367
எஸ்.டி – 365
இரண்டாம் சுற்றில் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்களில் அதிகமான மாணவர்கள் இருப்பதால் பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருக்காது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று குறையலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.