NEET UG 2025: விரைவில் நீட் ரிசல்ட்; தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர என்னென்ன ஆவணங்கள் தேவை?
NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு; தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள தேவையான ஆவணங்கள் என்னென்ன? முழு பட்டியல் இங்கே
NEET UG 2025: நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்பு; தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள தேவையான ஆவணங்கள் என்னென்ன? முழு பட்டியல் இங்கே
நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 நாடு முழுவதும் நடைபெற்றது. எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்த நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.
இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
தேவையான ஆவணங்கள்
Advertisment
Advertisements
நீட் தேர்வு அட்மிட் கார்டு
நீட் தேர்வு மதிப்பெண் அட்டை
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
மாற்றுச் சான்றிதழ்
6 – 8 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்