NEET UG 2025: நெருங்கும் நீட் தேர்வு; தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்?

NEET UG 2025: நெருங்கும் நீட் தேர்வு; தமிழகத்தில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன? எவ்வளவு இடங்கள் உள்ளன? தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்? முழு விபரம் இங்கே

NEET UG 2025: நெருங்கும் நீட் தேர்வு; தமிழகத்தில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன? எவ்வளவு இடங்கள் உள்ளன? தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
MBBS

நீட் தேர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4, 2025 அன்று ஆஃப்லைன் முறையில் நடைபெறுகிறது. இது எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களுக்கு போட்டியிட லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

அதேநேரம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இடம் பெற மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படும். மீதமுள்ள 85 இடங்கள் தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்த நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, 

Advertisment
Advertisements

அரசு மருத்துவக் கல்லூரிகள் – 36

தனியார் மருத்துவக் கல்லூரிகள் – 22

மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் – 4

சுயநிதி பல்கலைக்கழகங்கள் – 12

எய்ம்ஸ் மதுரை – 1

இதில் சுயநிதி பல்கலைக்கழகங்கள் மற்றும் எய்ம்ஸ் நிறுவன இடங்கள் முழுமையாக அகில இந்திய ஒதுக்கீடு மூலம் மட்டும் நிரப்பப்படும்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5050 இடங்கள் உள்ளன. இதில் 4238 இடங்கள் தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு மூலமும் 762 இடங்கள் அகில இந்திய கலந்தாய்வு மூலமும் நிரப்பப்படும். மேலும் ஈரோடு பெருந்துறை கல்லூரியில் 50 இடங்கள் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3206 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 433 இடங்களும் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும். 

அதேநேரம் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் 5896 இடங்களும், 7.5% இடஒதுக்கீட்டில் 486 இடங்களும் கிடைக்கும். 

Mbbs Counselling NEET Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: