/indian-express-tamil/media/media_files/5Vj3jiF6Jb72oIg3IwA0.jpg)
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், கவுன்சலிங்கின் போது சாய்ஸ் ஃபில்லிங் செய்ய, எந்த கல்லூரிக்கு எவ்வளவு வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும். இந்த நீட் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்யும் சாய்ஸ் ஃபில்லிங்கின் போது எந்தெந்த கல்லூரிக்கு எவ்வளவு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்பதை பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் செந்தில்நாதன் விளக்கியுள்ளார்.
விண்ணப்பப் பதிவு செய்ய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 500, மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு ரூ. 1000 செலுத்த வேண்டும்.
அடுத்ததாக கவுன்சலிங்கின் போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் பல்கலைக்கழங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 500 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேநேரம் 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு பதிவு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
செக்யூரிட்டி டெபாசிட்டை பொறுத்த வரை, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டெபாசிட் செலுத்த வேண்டியதில்லை. அரசு உதவி பெறும் கல்லூரியான இ.எஸ்.ஐ கே.கே நகர் கல்லூரிக்கான டெபாசிட் விபரம் கலந்தாய்வின்போது அறிவிக்கப்படும்.
அதேநேரம் 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்ய ரூ. 30000 வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும் 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை தேர்வு செய்ய ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.