/indian-express-tamil/media/media_files/0NOaETsfOILaSnM9oIEo.jpg)
12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்களை படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு மருத்துவத் துறையாகத் தான் உள்ளது. குறிப்பாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு தனி மவுசு உள்ளது. வருடந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதுவதிலிருந்தே, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துக் கொள்ளலாம். எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இருக்கும் வளமான வேலை வாய்ப்பு எதிர்காலம் இதற்கான ஆர்வத்தை தூண்டுகிறது.
எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அவசியமாகும். 5.5 வருட எம்.பி.பி.எஸ் படிப்பில் ப்ரீ-கிளினிக்கல், பாரா-கிளினிக்கல் மற்றும் கிளினிக்கல் பாடங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் சிறந்த அரசு மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிறந்த 10 அரசு மருத்துவக் கல்லூரிகள்
1). எய்ம்ஸ், டெல்லி
2). பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) சண்டிகர்
3). தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், பெங்களூரு
4). ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
5). சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
6). பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
7). சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை
8). ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
9). எய்ம்ஸ் ரிஷிகேஷ்
10). எய்ம்ஸ் புவனேஸ்வர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.