பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளங்கலை நீட் (NEET UG) 2025 தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய இந்த மருத்துவ நுழைவுத் தேர்வில், ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ள இறுதி தகுதி பட்டியலின்படி, பொதுப் பிரிவில் மகேஷ் குமார் 99.9999547% பெற்று முதலிடத்தை உறுதி செய்துள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 % பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மாணவிகளில், டெல்லியைச் சேர்ந்த அவிக்கா அகர்வால் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 99.9996832% பெற்று, அகில இந்திய தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, தகுதி பெற்ற மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மாணவர்களின் தரவரிசை, தேர்வு பதிவு எண், பெயர், பிரிவு, சதவீதம் மற்றும் அவர்கள் சார்ந்த மாநில விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
நீட் இளங்கலை 2025 தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியல்:
/indian-express-tamil/media/post_attachments/ef100716-93c.png)
சாதனைப் பட்டியலில் ஜொலித்த மாணவிகள்: இந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் மாணவிகள் பலரும் முத்திரை பதித்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்து, மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஷி சிங் (AIR 12), பதே சித்தி (AIR 26), ஹரிணி ஸ்ரீராம் (AIR 72) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தீப்னியா டி.பி (AIR 109) எனப் பல மாணவிகள் முதல் 100 இடங்களுக்குள் வந்து தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். குறிப்பாக, தென்னிந்திய மாணவிகளும் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஹரிணி ஸ்ரீராம் (AIR 72), கேரளாவின் நிதி கே.ஜி (AIR 84) மற்றும் தமிழகத்தின் தீப்னியா டி.பி (AIR 109) ஆகியோர் சிறப்பான தரவரிசைகளைப் பெற்று தங்கள் மாநிலங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது மருத்துவத் துறையில் பெண்களின் பங்களிப்பு பிரகாசமாக இருப்பதற்கான சான்றாகும்.
NEET UG 2024 Toppers (All AIR 1 Holders)
/indian-express-tamil/media/post_attachments/94680e40-195.png)