தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று (மே 29) மாலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in/NEET/ இல் நீட் தேர்வு விடைக்குறிப்பை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
நீட் தேர்வு ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி?
நீட் தேர்வுக்கான தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் - neet.ntaonline.in
நீட் தேர்வு ஓ.எம்.ஆர் (OMR) தாள் மற்றும் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்
விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்/ பிறந்த தேதியைப் பயன்படுத்தி வேட்பாளர் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
ஓ.எம்.ஆர் தாளை பதிவிறக்கம் செய்து பி.டி.எஃப் (pdf) வடிவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
நீட் தேர்வு (NEET UG) தற்காலிக விடைக் குறிப்புகளை மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சவால் செய்யலாம். நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, தேசிய தேர்வு முகமை இறுதி விடைக்குறிப்பை வெளியிடும், அதன் அடிப்படையில் நீட் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு விடைக்குறிப்பை ரூ.200 கட்டணத்துடன் சவால் செய்யலாம், இந்தக் கட்டணம் திரும்ப அளிக்கப்படாது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலை சாவல் செய்வதற்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட பிறகு எந்தச் சிக்கல்களும் விசாரணைகளும் நடத்தப்படாது என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு சுமார் ஒரு லட்சம் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களுக்கு போட்டியிடும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்டது. 24 லட்சம் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் 'மூன்றாம் பாலினம்' பிரிவினர் பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு பேனா-பேப்பர் அடிப்படையிலான தேர்வாக 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“