நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் கையெழுத்து எந்த கலரில் போட வேண்டும் அதேப் போல ஜாதி சான்றிதழ்கள் பெறுவது அதனை அப்லோட் செய்வது அதுமட்டுமின்றி பைனல் சம்மிஷன் கொடுப்பது என பல சந்தேகங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் மிஸ்பா கரியர் அகாடமி யூடியூப் பக்கத்தில் தெளிவாக விளக்கி கூறியிருப்பதாவது,
நீங்கள் போட்ட அப்ளிகேஷனில் தவறு ஏதேனும் இருந்தால் கரெக்ஷன் விண்டோ ஓபன் செய்து பார்க்கலாம். அதற்கு நீட் தேர்வுக்கு இணையதளத்திற்குள் சென்றதும் கரெக்ஷன் விண்டோ என்று இருக்கும் அதற்குள் செல்லவும். பின் அதற்குள் சென்றால் லாகின் ஓப்பன் செய்து லாகின் செய்து உள்ளே செல்லலாம்.
கரெக்ஷன் இன் அப்ளிகேஷன் ஃபார்ம் என்று இருக்கும் அதைத் தொட்டு உள்ளே சென்றதும் நிறைய இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை முதலில் தெளிவாக படிக்க வேண்டும். ஏனென்றால் எந்தெந்த தகவல்களை எல்லாம் புதுப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கவனமாக படித்துவிட்டு தான் நமது விண்ணப்பத் சரிபார்க்க வேண்டும்.
பின்னர் ஓடிபி மூலம் உள்ளே சென்றதும் நம்முடைய அப்ளிகேஷன் ஓபன் அகும். பின்னர் ஒவ்வொன்று காலமாக ஓபன் செய்து உள்ளே சென்றாலே எதெல்லாம் மாற்ற முடியும் என்று தெரியும் அதற்கேற்றம் சரியாக மாற்றிவிட வேண்டும்.
அடுத்தது கேட்டகிரி மாற்ற முடியும். அங்கு ஜெனரல் ஓபிசி சான்றிதழ் வைத்திருந்தால் அதற்கேற்றவாறு போடலாம். சாதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே ஓ பி சி சான்றிதழ் வாங்க அப்லோட் செய்ய வேண்டியது அவசியம்.
பின்னர் இதே போல ஒவ்வொன்றாக சரிபார்த்து மாற்ற வேண்டும். அடுத்ததாக நிறைய பேருக்கு கையெழுத்து எந்த நிறத்தில் போட வேண்டும் என்பதில் சந்தேகம் இருக்கும் . என் டி ஏ கூறியது போல கையெழுத்து கருப்பு நிறத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
Correction Window Opened - Got OBC Certificate - Signature in Blue Color - NEET 2025 Latest Update
இதுவரை நீல நிறத்தில் கையெழுத்து போட்டிருந்தும் அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகவில்லை. இருப்பினும் என்டிஏ -வில் கருப்பு நிறத்தில் போட வேண்டும் என்று கூறியிருப்பதால் கருப்பு நிறத்தில் போடலாம். எந்த பயமும் இல்லாமல் இருக்கலாம். என் டி ஏ கூறும் விதிமுறைகளை பின்பற்றிய இந்த படிவத்தை நிரப்பவும்.
அடுத்ததாக மதிப்பெண் சான்றிதழ்களையும் மாற்ற முடியும். எனவே ஒவ்வொன்றாக சரிபார்த்து அனைத்தையும் சரிபார்த்த பிறகு பைனல் சப்மிஷன் கொடுக்கலாம். கவனமாக பார்த்து சரிபார்க்கவும் ஒருமுறைதான் கரெக்ஷன் விண்டோ ஓபன் ஆகும்.