நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது? செயல்முறைகள் என்ன? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
இந்தியா முழுவதும் நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கவுன்சிலிங் செயல்முறை என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். இதுதொடர்பாக கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 37 கல்லூரிகளில் சேர்க்கைப் பெறலாம். மேலும், தேசிய அளவில் மருத்துவ கவுன்சில் நடத்தும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். இதில் அகில இந்திய ஓதுக்கீட்டு (15%) இடங்களில் சேர்க்கைப் பெறலாம். மேலும் ராணுவ மருத்துவ கல்லூரிகளிலும் சேர்க்கைப் பெறலாம். இதுதவிர சுயநிதி பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களிலும் சேர்க்கைப் பெறலாம். அடுத்ததாக தனியார் கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil