2023 பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகளின் கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, மருத்துவக் கல்வியின் உச்ச கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ ஆணையம் (NMC), அனைத்து எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்புகளுக்கான கல்வி காலெண்டரை நிர்ணயித்துள்ளது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET-UG 2023) முடிவுகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 11.4 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து, நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வில் மதிப்பெண் குறைவா? எம்.பி.பி.எஸ் தவிர இவ்ளோ ஆப்ஷன் இருக்கு!
இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகளை முடிப்பதற்கான கடைசி தேதியை அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டதாரி மருத்துவ கல்வி விதிமுறைகளின் படி, இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு பிறகு சேர்க்கை நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சேர்க்கை செயல்முறைகள் ஆகஸ்ட் இறுதிக்குள் கட்டாயமாக முடிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஒழுங்குமுறையின் கீழ் 82 பக்க வழிகாட்டுதல்களில் சேர்க்கை செயல்முறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் "எந்தச் சூழ்நிலையிலும் முடிக்கப்படும்" என்றும் கூறுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு அப்பால் அனுமதிக்கப்பட்ட எந்த மாணவர்களையும் பல்கலைக்கழகங்கள் பதிவு செய்யக் கூடாது. பாடத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்போது தொடங்கும் மற்றும் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதை விவரிக்கும் கல்வி காலெண்டரையும் இது குறிப்பிடுகிறது. நாடு முழுவதும் உள்ள இளங்கலை மருத்துவப் படிப்புகளின் காலக்கெடுவை ஒத்திசைக்கும் முயற்சியில் இது செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் தேசிய வெளியேறும் தேர்வை (NExT) தொடங்க NMC திட்டமிட்டுள்ள நிலையில் இது குறிப்பிடத்தக்கது. இது எம்பிபிஎஸ் இறுதித் தேர்வு, மருத்துவக் கவுன்சில்களில் மருத்துவர்களைப் பதிவு செய்வதற்கான உரிமத் தேர்வு மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கைத் தேர்வு என இரண்டு பகுதிகளைக் கொண்ட தேர்வாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil