/indian-express-tamil/media/media_files/5Vj3jiF6Jb72oIg3IwA0.jpg)
மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC), அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டுக்கான நீட் (NEET UG) கவுன்சிலிங்கின் 3 ஆம் சுற்றுக்கான பதிவைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். பதிவுச் சாளரம் அக்டோபர் 5 ஆம் தேதி முடிவடைகிறது, அதே நேரத்தில் சாய்ஸ் ஃபில்லிங் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5, 2025 அன்று இரவு 11:55 மணிக்கு முடிவடையும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
சாய்ஸ்களை சமர்பித்தல் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தொடங்கி அதே நாளில் இரவு 11:55 மணிக்கு முடிவடையும். மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அக்டோபர் 6 முதல் அக்டோபர் 7 வரை ஒதுக்கீட்டு செயல்முறையை மேற்கொள்ளும், முடிவுகள் அக்டோபர் 8, 2025 அன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங் 2025 ரவுண்ட் 3: யார் விண்ணப்பிக்கலாம்?
நீட் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே கவுன்சிலிங் செயல்பாட்டில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். கவுன்சிலிங் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியது:
1). 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்கள்
2). எய்ம்ஸ் (AIIMS), ஜிப்மர் (JIPMER), BHU, AMU மற்றும் ESIC நிறுவனங்களில் 100% இடங்கள்
3). மருத்துவ கவுன்சலிங் கமிட்டி மூலம் நிர்வகிக்கப்படும் நிறுவன ஒதுக்கீட்டு இடங்கள்
4). இ.எஸ்.ஐ.சி (ESIC) ஆல் நிர்வகிக்கப்படும் AFMC மற்றும் உள்ளக ஒதுக்கீடு
5). மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக சேர்க்கைகள்
நீட் கவுன்சிலிங்: ஆன்லைனில் பதிவு செய்வதற்கான படிகள்
பதிவு தொடங்கியதும், விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய இந்தப் படிகளைப் பின்பற்றலாம் –
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: mcc.nic.in
படி 2: “UG மருத்துவ கவுன்சிலிங்” பிரிவில் கிளிக் செய்யவும்
படி 3: நீட் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
படி 4: விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துங்கள்
படி 5: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும் (நீட் மதிப்பெண் அட்டை, புகைப்பட ஐ.டி, வகுப்புச் சான்றிதழ் போன்றவை)
படி 6: உங்கள் கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் விருப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்
படி 7: எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
ஒதுக்கப்பட்ட இடங்களில் திருப்தி அடைந்த விண்ணப்பதாரர்கள், அக்டோபர் 9 முதல் அக்டோபர் 17, 2025 வரை அந்தந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற வேண்டும்.
இதற்கிடையில், மத்திய அமைச்சரவை, அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.15,034 கோடி செலவில், தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் 5,023 எம்.பி.பி.எஸ் இடங்களையும் 5,000 முதுகலை இடங்களையும் சேர்க்கும் மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்களைச் சேர்க்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.