நீட் கவுன்சிலிங் இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போகலாம்… எம்சிசியின் திடீர் நோட்டீஸ்
வரம்பு மாற்றப்பட்டால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அதிகமான அல்லது குறைவான மாணவர்கள் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மாணவர் சேர்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும்
நீட் 2021 இளங்களை தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், கவுன்சிலங் பிராசஸ் எப்போது தொடங்கும் என லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், எம்சிசி விண்ணப்பத்தாரர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மருத்துவ கலந்தாய்வு இன்னும் ஒரு மாதம் கழித்து தான் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
Advertisment
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக, மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதாக விண்ணப்பதாரர்களுக்கு எம்ச்சி தெரிவித்துள்ளது. மருத்துவச் சேர்க்கைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட EWS ஒதுக்கீட்டைப் பெற, 8 லட்சத்தை வரம்பாக வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பிறகே, கவுன்சிலங் பிராசஸ் தொடங்கும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டையும், EWS பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அறிமுகப்படுத்தியது. EWS பிரிவு குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச வரம்பை முடிவு செய்தது தொடர்பான பின்னணியை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த பிரிவு பங்கீடு UG மற்றும் PG சேர்க்கைகளுக்கு பொருந்தும் என்றும், புதிய கொள்கை அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) சேர்க்கைக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த விசாரணையில், இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில், EWS ஒதுக்கீட்டு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கி நான்கு வாரங்களுக்குள் புதிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.
வரம்பு மாற்றப்பட்டால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அதிகமான அல்லது குறைவான மாணவர்கள் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மாணவர் சேர்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதால், இளங்களை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் பிராசஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil