NEET-UG 2021 முடிவுகளோடு NEET-UG 2021 ஆம் ஆண்டுக்கான தகுதி கட்-ஆஃப்-ஐ தேசிய தேர்வு முகமை நிறுவனம் (NTA) வெளியிடும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே MBBS, BDS, ஆயுஷ், BVSc மற்றும் AH படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். நீட் கட்-ஆஃப் என்பது குறைந்தபட்ச சதவிகிதம் ஆகும். தேர்வில் தேர்ச்சி பெற இந்த குறைந்தப்பட்ச மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும்.
தகுதி கட்-ஆஃப் விகிதம் ஏற்கனவே தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளுடன் கட்-ஆஃப் ஸ்கோர்ஸ் அல்லது மதிப்பெண்கள் அறிவிக்கப்படும். உயர்மட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான நீட் கட்-ஆஃப் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வகை வாரியாக நீட் கட்-ஆஃப் சதவிகிதம் பின்வருமாறு:
பொது மற்றும் பொது- EWS பிரிவுகளுக்கு 50 வது சதவீதம்
எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவுகளுக்கு 40 வது சதவீதம்
பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேசிய தேர்வு முகமை கட்-ஆஃப்பை நிர்ணயிக்கிறது. சில காரணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
நீட் 2021 தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை
மொத்த இடங்களின் எண்ணிக்கை
நீட் தேர்வின் சிரம நிலை
நீட் தேர்வுகளின் முந்தைய ஆண்டுகளின் கட்ஆஃப்
NEET 2021 கட்-ஆஃப் ஆனது NTA வால் சேர்க்கைக்கான தகுதி பட்டியலை தயாரிக்க பயன்படும். தகுதித்தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீட் கவுன்சிலிங் நடத்தப்படும். 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (AIQ), சுயநிதி பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC/AFMC நிறுவனங்கள், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழு (MCC) மூலம் நடத்தப்படும். மாநில மருத்துவ சேர்க்கை அமைப்பு 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான சேர்க்கை செயல்முறையை நடத்துவார்கள்.
நீட் 2021 தேர்வு செப்டம்பர் 12, 2021 அன்று எழுத்துத் தேர்வு அடிப்படையிலான முறையில் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் 542 மருத்துவக் கல்லூரிகள், 313 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் மற்றும் 47 BVSc மற்றும் AH கல்லூரிகளின் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil