/indian-express-tamil/media/media_files/q5lrDBdkaH06GoZJIIQt.jpg)
NEET UG எப்படி விண்ணப்பிப்பது? (எக்ஸ்பிரஸ் பிரதிநிதித்துவப் படம் - ஜாவேத் ராஜா)
தேசிய தேர்வு முகமை (NTA) இந்த வாரம் NEET UG 2024க்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும். மூத்த NTA அதிகாரியின் கூற்றுப்படி, விண்ணப்பப் பதிவு இன்று அல்லது நாளை தொடங்கும். NEET UG 2024 தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும்.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இரண்டு மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. NEET UG ஆர்வலர்கள் NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய பாடத்திட்டத்தை தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தநிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) பகிர்ந்துள்ள தரவுகளின்படி. இந்தி, தமிழ், அஸ்ஸாமி மற்றும் பெங்காலி மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
2013 ஆம் ஆண்டில், ஆங்கிலத்துடன், குஜராத்தி, பெங்காலி, தமிழ், மராத்தி, தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஆறு பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. NTA ஆல் பகிர்ந்து கொள்ளப்பட்ட நான்கு ஆண்டு தரவுகளை கவனித்தால், NEET UG பதிவு 2020 இல் 15,97,435 ஆகவும், 2021 இல் 16,14,777 ஆகவும், 2022 இல் 18,72,343 ஆகவும் நிலையான அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது. மொழி வாரியாக ஆங்கிலத்தில் தேர்வு எழுத அதிகமானோர் விண்ணப்பித்தனர். இந்தி இரண்டாவது அதிக பதிவு செய்யப்பட்ட மொழி.
தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளின் எழுச்சி மற்றும் நீட் தேர்வு எழுதுபவர்களில் மராத்தி, ஒடியா மற்றும் குஜராத்தியின் வீழ்ச்சி ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
இந்த நான்கு ஆண்டுகளில் தமிழுக்கான பதிவு 3,043.07 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், ”உள்ளூர் மொழிகளில் புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள் கிடைப்பது இதற்குக் காரணம். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, எம்.பி.பி.எஸ் தமிழில் கற்பிக்க முடியும் என்று நினைக்க முடியாது. ஆனால், மருத்துவ நூல்களை எழுதி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த வட்டார எழுத்தாளர்கள் ஏராளம். டாக்டர் கணேசன் மற்றும் டாக்டர் சுரேந்திரனின் எம்.பி.பி.எஸ் புத்தகங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கிடைக்கின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகமும் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவப் பாடப் பாடத்திட்டத்தை உள்ளூர் மொழிகளில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. மேலும், இந்த தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் உயர்கல்வி படிக்க அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த மாற்றத்தை எளிதாக்க பல AI பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
இதேபோல் பெங்காலி மொழியிலும் புத்தகங்கள் கிடைப்பதால் மேற்கு வங்கத்தில் இருந்தும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.