Advertisment

நீட் தேர்வு குறித்த அதிர்ச்சி: தூக்கமின்மை, மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவது எப்படி?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் மன உளைச்சலில் இருக்கும் தேர்வாளர்களுக்கு அதில் இருந்து மீண்டு வர நிபுணர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Neet 2024

வசுதா சர்மா

Advertisment

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக +2 தேர்தவில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் பெரிய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்கு கடுமையான பதற்றத்தை சந்தித்து வருவதும், தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

Read In English : NEET UG examinees mental trauma: Why you must watch out for panic attacks, doom scrolling and insomnia

மேலும் நீட் தேர்வு எழுத செல்லும் தேர்வாளர்களுக்கு நடத்தப்படும் சோதனையும் ஒரு பக்கம் கடுமையான பயத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடந்த நீட்தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், நீட் தேர்வு எழுதியவர்கள், தேர்வுக்கு பின்னலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நீட் யூஜி தேர்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பே தேர்வு தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த தேர்வுத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் யூஜி தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தேர்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து கடந்த 3 வருடங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரேயா என்பவரை சந்தித்து பேசினோம். தேர்வுதாள் கசிவுகள், எதிர்பாராத மதிப்பெண்கள் மற்றும் சாத்தியமான மறுபரிசீலனைக்குப் பிறகு தற்போது நிச்சயமற்ற நிலை இருக்கிறது.

இப்போது நீட் தேர்வு குறித்து பீதியும் எழுந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் நான் ஒரு குழப்பத்தில் இருந்தேன். இது முற்றிலும் எதிர்பாரத ஒன்று. எனது சோதனையில் நான் உறுதியாக இருந்தேன். நீட் என்ற கட்டுப்பாடற்ற சோதனையை கடந்து செல்ல என் உடல் நடுங்கியது. ஒரு திடீர் பயமும் பதட்டமும் என்னை ஆட்கொண்டது. கைகால்களை நகர்த்துவது ஒரு முயற்சியாகத் தோன்றியது. மறுதேர்வு நடத்தினாலும், படிக்க வேண்டும் என்ற ஊக்கம் கூட எனக்கு இல்லை. என்னால் இனி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் கூறியுள்ளார்.

அதிர்ச்சியின் அறிகுறிகள்

ஸ்ரேயா போன்ற பல நீட் யூஜி தேர்வு எழுதியவர்கள், அதிர்ச்சி, மனச்சோர்வு, திசைதிருப்பல் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மூழ்கியுள்ளனர் மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் தங்கள் சுய மதிப்பு குறித்து தங்களுக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் இல்லாத நடத்தை மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர்.

உதாரணமாக, சாரா என்பவர் தனது பசியை இழந்துவிட்டார். நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை தூக்கம் இல்லாமல் விழித்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக எதிர்மறை உணர்ச்சிகள் அவருக்குள் உருவாகிறது. அதேபோல் நொய்டா பகுதியை சேர்ந்த மாணவியான அர்ச்சனா, சமூக ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளைப் படிப்பது அவற்றைச் செயலாக்க நினைப்பது அவரது அதிர்ச்சியைக் குறைக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் அமைதியாக இருந்த அர்ச்சனா இப்போது கோபம் மற்றும் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். “தன்னிச்சையான கருத்துக்களால் நான் கோபப்படுகிறேன். என்னை மேம்படுத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை, ஏனென்றால் அது அர்த்தமற்றதாக உணர்கிறது. பல வருடங்கள் கடினமாக உழைத்தும், எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஃபோர்டிஸ் ஹெல்த்கேரில் உள்ள மனநலம் மற்றும் நடத்தை அறிவியலின் எச்.ஓ.டி (HOD) டாக்டர் கம்னா சிப்பர் கூறுகையில், நுழைவுத் தேர்வுக் கவலையை அனுபவிக்கும் நிறைய மாணவர்களைப் பார்த்து வருகிறேன். முதன்மையாக அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லாதபோது. “நீட் மாணவர்கள் இப்போது மறுதேர்வு பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களின் முந்தைய முயற்சி எண்ணப்படுமா இல்லையா? சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு இடையில், விரக்தி, தூக்கமின்மை மற்றும் சுய-தனிமை ஆகியவை பொதுவானவை, ”என்று அவர் கூறியுள்ளார்.

மன உளைச்சலில் இருந்து எப்படி வெளியேறுவது

டாக்டர் சிப்பர் குடும்பம் மற்றும் நண்பர்களை ஒன்றுகூடி சில நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியுள்ளார். மாணவர்கள் கற்பனையான சூழ்நிலைகள் மற்றும் செயலற்ற உரையாடல்களுக்குப் பதிலாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, மறுபரிசோதனை தவிர்க்க முடியாததாக இருந்தால், அதை நீங்கள் பிற்காலத்தில் எடுக்க வேண்டிய மற்றொரு சோதனையாகப் பாருங்கள், அது சவாலானதாகத் தெரியாது. 

இந்த இடைவெளியை சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த பெற்றோர்கள் மாணவர்களின் கவனத்தைத் திருப்பிவிட வேண்டும். உங்கள் பிள்ளையின் தினசரி வழக்கத்தை மேற்கொள்ளவும், மற்றவர்களை சந்திக்கவும், பொழுதுபோக்காகவும் அல்லது வெளியில் செல்லவும் ஊக்குவிக்கவும்.

டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் அச்சல் பகத், மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வது மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவரது பரிந்துரைகள்:

மன அழுத்தத்தை நிவர்த்தி செய்யுங்கள், ஏனெனில் இதனை சரிபார்க்காமல் விட்டுவிட்டால், அது மற்ற மனநலக் கோளாறுகளைத் தூண்டிவிடும். உதவியற்ற உணர்வு, குறைந்த மனநிலை, ஊடுருவும் எண்ணங்கள் ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம், அதேசமயம் அதிகரித்த இதயத் துடிப்பு, அதிக சிந்தனை, அதிக வியர்வை ஆகியவை கவலையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் B அல்லது C என்று அடுத்தடுத்த திட்டத்தை உருவாக்குங்கள், இதன் மூலம் நீங்கள் ஒற்றை இலக்கைத் நோக்கி பயணிக்காமல் இருப்பதற்கும், அடுத்த முயற்சிகளை மேற்கொள்ளவும் முடியும். உங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

மாணவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்க முடியும், ஏனென்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றங்களை தனிப்பட்ட அளவில் புரிந்துகொண்டு முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம்," என்று சாரா என்பவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஜர்னலிங்கிற்குத் திரும்பியுள்ள அவர், முறைசாரா ஆதரவு குழுவில் மற்ற நீட் தேர்வாளர்களுடன் தீர்வுகளைப் பற்றி விவாதித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment