தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2023க்கான விடை குறிப்பு மற்றும் முடிவுகளை வெளியிடும். வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்ணை அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ இல் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவை வெளியிட உள்ள நிலையில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2022ன் அடிப்படையில் இந்தியாவின் டாப் 5 மருத்துவக் கல்லூரிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.
இதையும் படியுங்கள்: 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; குறைகளை சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
1) டெல்லி எய்ம்ஸ்:
91.60 மதிப்பெண்களுடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), டெல்லி இந்திய மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான தரவரிசையிலும் எய்ம்ஸ் டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம் எய்ம்ஸ் சட்டம், 1956 ஆல் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்படுகின்றன.
2) முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER)
முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) என்பது சண்டிகரில் அமைந்துள்ள ஒரு பொது மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகும். இதற்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது மற்றும் NIRF 2022 மருத்துவ தரவரிசையில் 79 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. PGIMER 2021 ஆம் ஆண்டிலும் இரண்டாவது இடத்தை பெற்றது.
இந்த நிறுவனம் 1962 ஆம் ஆண்டு பஞ்சாப் அரசின் கீழ் நிறுவப்பட்டது. 1967 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என அறிவிக்கப்பட்டது. முனைவர் பட்டம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நுழைவுத் தேர்வில் அடையும் தகுதியின் அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
3) கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி
கடந்த ஆண்டு NIRF மருத்துவ தரவரிசையில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (CMC), ஒட்டுமொத்த அளவில் 72.84 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட CMC வேலூர் கடந்த மூன்று ஆண்டுகளாக (2022, 2021 மற்றும் 2020) NIRF மருத்துவ தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இடம்பெற்று வருகிறது.
4) நிம்ஹான்ஸ், பெங்களூரு:
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், பெங்களூரு, கடந்த மூன்று ஆண்டுகளில் NIRF தரவரிசையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட மற்றொரு மருத்துவ நிறுவனமாகும். நிம்ஹான்ஸ் பெங்களூர் 2020 முதல் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த முறை, நிறுவனம் 71.56 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
1847 இல் நிறுவப்பட்ட இது ஒரு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்’ ஆகும், இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.
5) பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இந்த முறை NIRF மருத்துவ தரவரிசையில் முன்னிலை பெற்று 5 ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், மருத்துவ நிறுவனம் ஆறாவது இடத்தைப் பிடித்தது, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் 68.12 உடன், 2022 ஆம் ஆண்டு தரவரிசைப் பதிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. 1916 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் அதன் மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு பெயர் பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.