8 லட்சம் பேர் நீட் பாஸ்: அடுத்தகட்ட கவுன்சலிங் எப்படி? நீங்கள் அறிய வேண்டியவை என்ன?

தகுதியான விண்ணப்பதாரர்கள் NEET-UG கவுன்சிலிங் 2021 செயல்முறையில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைன் நீட் கவுன்சிலிங்கில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் 85 சதவீதம் மாநில ஒதுக்கீடு என இரண்டு ஒதுக்கீட்டில் நடைபெறும்.

NEET UG result 2021, All you need to know about counselling process, NEET counselling process, 8 lakh candidate pass in neet, நீட் தேர்வு முடிவுகள் 2021, நீட் தேர்வு முடிவுகள், கவுன்சிலிங் நடைமுறை, நீட் கவுன்சிலிங் நடைமுறை, NEET Results, counselling process 2021, neet counselling 2021 fees, neet counselling 2020 dates, neet counselling 2021 documents required, neet counselling documents, state counselling for neet ug 2020, neet counselling process, medical counselling 2021 date

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு 2021 முடிவுகளை neet.nta.nic.in- இல் நவம்பர் 1ம் தேதி அறிவித்தது. தேதிய தேர்வ் முகமை மருத்துவப் படிப்புக்கான தகுதி கட்-ஆஃப்பையும் வெளியிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்து தகுதி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் ஏ.ஐ.ஆர்-1 உடன் சரியாக 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் NEET-UG கவுன்சிலிங் 2021 செயல்முறையில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைன் நீட் கவுன்சிலிங் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் 85 சதவீதம் மாநில ஒதுக்கீடு என இரண்டு ஒதுக்கீட்டிலும் நடைபெறும்.

அகில இந்திய கவுன்சிலிங் – மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி, அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்/மத்திய பல்கலைக்கழகங்கள்/ பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) AFMC, AIIMS மற்றும் JIPMER ஆகியவற்றில் 15 சதவீத அகில இந்திய ஒதுகீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அகில இந்திய கவுன்சிலிங்கை நடத்துகிறது. அனைத்து நீட் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அகில இந்திய கவுன்சிலிங் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மாநில கவுன்சிலிங் – அந்தந்த மாநிலங்களின் கவுன்சிலிங் அதிகாரிகள் அரசு கல்லூரிகளில் 85% இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கவுன்சிலிங்கை நடத்துகிறார்கள்.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கைக்கு, வேட்பாளர்கள் மாநில அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

NEET 2021 இன் கவுன்சிலிங் செயல்முறை பின்வரும் முறையில் நடைபெறும்:

Registration – பதிவு செய்தல்

Payment of counselling fee – கவுன்சிலிங் கட்டணம் செலுத்துதல்

Choice filling and locking – தேர்வு செய்து நிரப்புதல் மற்றும் உறுதி செய்தல்

Publication of seat allotment list – இட ஒதுக்கீடு செய்ததற்கான பட்டியல் வெளியீடு

Reporting to the allotted college – ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு தகவல் அனுப்புதல்

மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி ஆன்லைன் முறையில் 3 சுற்றுகளாக கவுன்சிலிங்கை நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான நீட் கவுன்சிலிங் 2021 இரண்டு சுற்றுகளாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகர்நிலை/மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC, AFMC, AIIMS மற்றும் JIPMER MBBS சேர்க்கைகளுக்கான நீட் ஒதுக்கீடு செயல்முறைக்கு ஒரு மாப்-அப் சுற்று நடத்தப்படுகிறது. NEET 2021 கவுன்சிலிங் அட்டவணை மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mcc.nic.in-இல் விரைவில் புதுப்பிக்கப்படும். மாநில கவுன்சிலிங் அதிகாரிகளும் அந்தந்த இணையதளங்களில் கவுன்சிலிங் விவரங்களை வெளியிடுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neet ug result 2021 8 lakh candidates pass all need to know counselling process

Next Story
வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு : தமிழக அரசின் வழக்கறிஞர் பணிTNPSC VAO Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express