scorecardresearch

NTA NEET Results 2022: கட்-ஆஃப் குறைவு, 56.28 தேர்ச்சி சதவீதம்

அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா உட்பட 16 மாணவிகள், முதல் 50 இடங்களை பிடித்தனர். தனிஷ்கா 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

neet ug result 2022
NEET UG 2022 results: Check cut-off here. Express Photo by Gajendra/ Representative image

தேசிய தேர்வு முகமை (NTA) புதன்கிழமை நீட் யுஜி 2022 தேர்வு முடிவுகளை அறிவித்தது, இதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, தேர்ச்சி சதவீதம், கிட்டத்தட்ட கடந்த ஆண்டைப் போலவே.  56.28 ஆக இருந்தது. இந்த தேர்வு முடிவுகளை nta.neet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

எவ்வாறாயினும், தகுதிக்கான அளவுகோல்களைப் பார்த்தால், பிரிவுகள் முழுவதும் கட்-ஆஃப்கள் குறைக்கப்பட்டதைக் காட்டுகிறது – பொது பிரிவுக்கான கட்-ஆஃப் 2021 இல் 138 முதல் இந்த ஆண்டு 117 வரையிலும், SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு 108 முதல் 93 வரை குறைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், கட்-ஆஃப்கள், பொது பிரிவினருக்கு 147 ஆகவும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு 113 ஆகவும் இருந்தது.

அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா உட்பட 16 மாணவிகள் முதல் 50 இடங்களை பிடித்தனர். தனிஷ்கா 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அகில இந்திய தரவரிசையின் படி, முதல் 50 இடங்களில், 9 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் டெல்லியில் தலா 5 பேர் உள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 பேரும்; மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஹரியானா தலா இரண்டு; பஞ்சாப், ஜம்மு, கோவா, உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், கேரளாவில் இருந்து தலா ஒருவர் முதல் 50 இடங்களை பிடித்தனர்.

ஒரு அறிக்கையில், நீட் (யுஜி) மூத்த இயக்குனர் டாக்டர் சாதனா பராஷர், “18.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு பதிவு செய்தனர், இது 2021 இல் 16.1 லட்சமாக இருந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ இடங்களுக்கான நுழைவாயிலாக இருக்கும் நுழைவுத்தேர்வு, 14 வெளிநாட்டு மையங்கள் உட்பட 497 நகரங்களில் 3570 மையங்களில் 13 மொழிகளில் நடைபெற்றது.

78.8 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், இந்தியில் 13.82 சதவீதம் பேரும் தேர்வெழுதினர். 7.34 சதவீதம் பேர் மீதமுள்ள பிராந்திய மொழிகளில் தேர்வெழுதினர்.

தகுதிபெறும் மாணவர்களில் வகை வாரியான பிரிவுகள், கடந்த ஆண்டு முறையே 13.1 சதவீதம், 4.6 சதவீதம் மற்றும் 45.6 சதவீதத்தில் இருந்து, 13.3 சதவீதம் பேர் எஸ்சி, 45.08 சதவீதம் ஓபிசி மற்றும் 4.7 சதவீதம் எஸ்டி என்று காட்டுகிறது.

அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய் மற்றும் குவைத் நகரங்களில் முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்டது.

மாநில ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களின் வரம்பிற்கு உட்பட்ட பிற இடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விண்ணப்பிக்கலாம், மாநில விதிகளின்படி தகுதி பட்டியல், அகில இந்திய தரவரிசை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் அதிகாரிகளால் தயாரிக்கப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் சம்பந்தப்பட்ட மாநில கவுன்சிலிங் ஆணையத்தால் நடத்தப்படும்” என்று தேசிய தேர்வு முகமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neet ug result 2022 neet cut off neet 2022 answer key nta

Best of Express