இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி சுமார் 500 நகரங்களில் 5,453 மையங்களில் நடைபெற்றது. சுமார் 23 லட்சம் மாணவர்கள், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
நீட் யுஜி 2025 தேர்வில் கலந்து கொண்ட மருத்துவ மாணவர்கள் neet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம். மாற்றாக, மருத்துவ மாணவர்கள் யு.எம்.ஏ.என்.ஜி (UMANG) செயலி மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) மூலமாகவும் நீட் யுஜி 2025 முடிவுகளைப் பார்க்கலாம். முதன்முறையாக, நீட் யுஜி 2025 தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும் மின்னஞ்சலில் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இன்று (ஜூன் 14) அன்று நீட் யுஜி இறுதி விடைக்குறிப்பையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த ஆண்டு எந்த கேள்விகளும் விடுபடவில்லை. இருப்பினும், பல கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதில்கள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியாகக் கண்டறியப்பட்ட கேள்விகளுக்கு, கேள்வியை முயற்சித்தவர்களுக்கு மட்டுமே நான்கு மதிப்பெண்கள் (+4) வழங்கப்படும். நீட் யுஜி வினாத்தாளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றில் 180 கட்டாய கேள்விகள் இருந்தன.
கட்-ஆஃப்
தேசிய தேர்வு முகமை ஜூன் 3 அன்று தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது, மேலும் தற்காலிக நீட் யு.ஜி இறுதி விடைக்குறிப்புக்கு எதிராக புகார் தெரிவிக்க ஜூன் 5 ஆம் தேதி அவகாசம் இருந்தது.