Ananthakrishnan G
இந்த ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், புதிதாக தேர்வு எழுத விரும்புவோருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனு அகர்வால், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு, இழப்பீட்டு மதிப்பெண்கள் இல்லாமல் இந்த விண்ணப்பதாரர்களின் உண்மையான மதிப்பெண்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார். இந்தத் தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும், மீண்டும் தேர்வு எழுத விரும்பாதவர்களின் முடிவுகள் அவர்கள் பெற்ற “உண்மையான மதிப்பெண்களின்” அடிப்படையில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மறுதேர்வு அறிவிப்பு வியாழனன்று அறிவிக்கப்படும் என்றும், ஜூன் 23 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும், எனவே ஜூலை 6 ஆம் தேதி தொடங்கும் கவுன்சிலிங் செயல்முறை பாதிக்கப்படாது.
கருணை மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பு சமர்பிப்புகளைக் கவனத்தில் கொண்ட பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்தது.
கவுன்சிலிங்கை நிறுத்தவில்லை என்றும் பெஞ்ச் தெளிவுபடுத்தியது. "நாங்கள் ஏன் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கையை தாமதப்படுத்த வேண்டும்?" என்று நீதிபதிகள் கேட்டனர்.
கருணை மதிப்பெண்கள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டன, அதில் மதிப்பெண் அட்டைகளை ரத்து செய்து மறுதேர்வு நடத்த முன்மொழியப்பட்டது என்று கனு அகர்வால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெஞ்ச் தனது உத்தரவில், “கமிட்டியின் பரிந்துரைகளின்படி, ஜூன் 4, 2024 அன்று பாதிக்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு திரும்பப் பெறப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட 1,563 விண்ணப்பதாரர்களின் உண்மையான மதிப்பெண்கள் இழப்பீட்டு மதிப்பெண்கள் இல்லாமல் தெரிவிக்கப்படும்,” என்று தெரிவித்தது.
மேலும், 1,563 பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கு வர விரும்பாத விண்ணப்பதாரர்களின் முடிவுகள் மே 5 தேர்வில் அவர்கள் பெற்ற இழப்பீடு இல்லாமல் அவர்களின் உண்மையான மதிப்பெண்களின் அடிப்படையில் அறிவிக்கப்படும் மற்றும் மறுதேர்வு எழுதுபவர்களின் மதிப்பெண்கள் பரிசீலிக்கப்பட்டு, மே 5, 2024 அன்று நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் அவர்களின் மதிப்பெண்கள் நிராகரிக்கப்படும்,” என்றும் பெஞ்ச் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“