மருத்துவ கவுன்சலிங் கமிட்டி, மாநில மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) பிரிவுகளில், நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட, அனைத்து சுற்று சீட் ஒதுக்கீட்டிற்கான நீட் (NEET UG 2025) கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை அட்டவணையை அறிவித்துள்ளது. இந்த செயல்முறை நான்கு கட்டங்களைக் கொண்டிருக்கும் - சுற்று 1, சுற்று 2, சுற்று 3, மற்றும் இறுதி காலியிடச் சுற்று - ஒதுக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களில் சேர அக்டோபர் 3 கடைசி தேதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும். நீட் தேர்வு முடிவு ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது.
மாநில மருத்துவ கவுன்சலிங் சுற்று ஒன்று
அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான சுற்று 1 கவுன்சிலிங் ஜூலை 21 முதல் ஜூலை 30 வரையிலும், மாநில ஒதுக்கீட்டிற்கான சுற்று 1 கவுன்சிலிங் ஜூலை 21 முதல் ஜூலை 30 வரையிலும் நடைபெறும். இந்த கட்டத்தில் கல்லூரிகளில் சேருவதற்கான கடைசி தேதிகள் முறையே ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7–8 (MCC) மற்றும் ஆகஸ்ட் 13–14 (மாநிலங்கள்) வரை மாணவர் சரிபார்ப்பு நடைபெறும்.
மாநில மருத்துவ கவுன்சலிங் சுற்று இரண்டு
அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான சுற்று 1 கவுன்சிலிங் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 20 வரையிலும், மாநில ஒதுக்கீட்டிற்கான சுற்று 1 கவுன்சிலிங் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 29 வரையிலும் நடைபெறும். இந்தச் சுற்றுக்கான சரிபார்ப்பு ஆகஸ்ட் 30–செப்டம்பர் 1 (MCC) மற்றும் செப்டம்பர் 5–6 (மாநிலங்கள்) இடையே நடைபெறும்.
மாநில மருத்துவ கவுன்சலிங் சுற்று மூன்று
அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான சுற்று 1 கவுன்சிலிங் 3 செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையிலும், மாநில ஒதுக்கீட்டிற்கான சுற்று 1 கவுன்சிலிங் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 18 வரையிலும் நடைபெறும். கல்லூரிகளில் சேருவதற்கான கடைசி தேதிகள் செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 23 ஆகும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19–21 (MCC) மற்றும் செப்டம்பர் 24 (மாநிலங்கள்) இடையே சரிபார்ப்பு நடைபெறும்.
மாநில மருத்துவ கவுன்சலிங் காலியிடச் சுற்று
இறுதி கட்டமான காலியிடச் சுற்று, அகில இந்திய கவுன்சலிங் செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 26 வரையில் மற்றும் மாநில கவுன்சலிங் செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 29 வரையிலும் நடைபெறும், அக்டோபர் 3, 2025 அனைத்துப் பிரிவுகளிலும் சேர கடைசித் தேதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங் செயல்முறையை சுமூகமாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்த வசதியாக, மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC), பங்கேற்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும், கவுன்சிலிங் காலம் முழுவதும் அதாவது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களையும் வழக்கமான வேலை நாட்களாகக் கருதுமாறு அறிவுறுத்தியுள்ளது.