மருத்துவ இளங்கலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டேரி 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
அவரது சாதனையின் தூரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மிரினால், " இரண்டு தேர்விலும் இயற்பியல், வேதியியல் பொதுவான பாடங்கள் என்பதால், ஜேஇஇ தேர்வு எழுதினேன்.ஆனால், 99.28 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை.தற்போது, ஜேஇஇ அட்வான்ஸூடு தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளேன்" என்றார். உயிரியல் மீதான காதலால், மிரினால் மருத்துவத் துறை தேர்ந்தெடுத்துள்ளார். ஜேஇஇ தேர்வில் அகில இந்தியத் தரவரிசையில் 1028 ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய அறிவியல் கழகம் (IISc) நடத்திய கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சகன் யோஜனா (KVPY) தேர்விலும் மிரினால் தேர்ச்சியடைந்துள்ளார். ஒருவேளை, நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை என்றால், மரபியல் ஆராய்ச்சி படிப்பை பயில திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மிரினால், " எட்டாம் வகுப்பு வரை, ரசாயனங்கள் மீதான ஆர்வத்தால், கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், காலப்போக்கில் உயிரியல் மீது ஆர்வம் அதிகரித்தது. எனவே, உயர் நிலை பள்ளியில் இரண்டு பாடங்களையும் நன்கு படித்தேன்.
நீட்டில் தேர்ச்சி பெற தொடர்ச்சியாக 8 முதல் 10 மணி நேரம் வரைலாம் படிக்க மாட்டேன். 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். எனது பெற்றோரும் ஆசிரியர்களும் உறுதுனையாக இருந்தார்கள்.
லாக்டவுன் காலம் மிகவும் உபயோகமாக இருந்தது. பயணங்களால் எவ்வித நேரமும் வீணாகவில்லை. 11ஆம், 12 ஆம் வகுப்பு புதக்கங்களிலும், பயிற்சி இன்ஸ்ட்டீயுட் வழங்கிய புத்தகங்களிலும் கவனம் செலுத்தினேன். நீட் தேர்வுக்கு முந்தைய மாதத்தில் நண்பர்களுடனான தொடர்புகளைக் குறைத்துக்கொண்டேன். அதற்காக, வெளியுலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக குறைக்கவில்லை" என்றார்.
மிரினாள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தேர்வில் முதலிடம் பெறுவார் என்பதை எதிர்பார்க்கவில்லை.
மேலும் பேசிய அவர், " எய்ம்ஸ் டெல்லியில் சேர்ந்து மருத்துவ படிப்பை பயில ஆசைப்பட்டிருந்தேன். அதே சமயம், மற்றொரு சாய்ஸூம் வைத்திருந்தேன். டெல்லி எய்ம்ஸூக்கு அடுத்தப்படியாக புதுச்சேரி ஜிம்பர் கல்லூரியை மனதில் வைத்திருந்தேன். மருத்துவ துறையில் எதில் நிபுணராக வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், மருத்துவத்தில் MS பயில விருப்பம் உள்ளது" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.