Sheen Kachroo
ஹரித்வாரைச் சேர்ந்த அக்ஷத் சிங் தனது முதல் முயற்சியிலேயே நீட் (NEET UG 2024) தேர்வில் வெற்றி பெற்றார். நாட்டிற்கு சேவை செய்வதையும், ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்ட அக்ஷத் சிங், திறந்தநிலை பள்ளிகளை விட்டுவிட்டு, டி.பி.எஸ் ஹரித்வாரில் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அக்ஷத் சிங் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG Toppers’ Tips: ‘Use basic concepts to solve difficult questions’
நீட் தேர்வில் கிட்டதட்ட முழு மதிப்பெண்களைப் பெற்ற பிறகு, அக்ஷத் சிங் தனது மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மருத்துவராக மாறுவது உறுதி.
2024 நீட் தேர்வில், அக்ஷத் சிங் 697 மதிப்பெண்கள் பெற்றார் மற்றும் இப்போது எய்ம்ஸ் (AIIMS) ரேபரேலியில் எம்.பி.பி.எஸ் (MBBS) படித்து வருகிறார். விடுதியில் அல்லாமல் தினசரி வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்த அக்ஷத் சிங்கிற்கு, நீட் தேர்வுக்கு தயாராவது மிகவும் கடினமான பணியாக இருந்தது. "எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பேசி, நான் என்ன செய்கிறேன் என்பதை தெளிவுபடுத்திய பிறகு, மருத்துவராக வேண்டும் மற்றும் வெள்ளை கோட் அணிய வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற மீண்டும் உறுதியாக இருந்தேன்," என்று அக்ஷத் சிங் கூறினார்.
அக்ஷத் சிங்கைப் பொறுத்தவரை, தேர்வில் கடினமான கேள்விகளைத் தீர்ப்பதற்கான திறவுகோல், பாடத்தை விரைவாக முடிக்கவும், திருப்புதல் செய்யவும் ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்பிற்குத் தாவுவதை விட, தலைப்பின் அடிப்படைக் கருத்துக்களை 'வரிசையாக' தெளிவுபடுத்துவதாகும். "நான் இதை நம்புகிறேன், ஏனென்றால் கணக்கீடுகள் கூட சில எளிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை, அவை புரிந்து கொள்ளப்பட்டால் நொடிகளில் தீர்க்கப்படலாம்" என்று அக்ஷத் சிங் கூறினார்.
ரிவிஷன் என்பது தயாரிப்பின் மிக முக்கியமான பகுதியாகும் மற்றும் ஆலன் இன்ஸ்டிடியூட்டில் தனது பயிற்சித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது அக்ஷத் அனைத்து தலைப்புகளையும் படிப்பதை உறுதி செய்தார். தேர்வு தயாரிப்புக்காக, அக்ஷத் சிங் முந்தைய அனைத்து தலைப்புகளையும் ரிவிஷன் செய்துக் கொண்டார்.
அக்ஷத் சிங் இதைச் செய்யக் காரணம், புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பும் அது என்.சி.இ.ஆர்.டி அல்லது பயிற்சி புத்தகங்களுடன் இணைக்கப்பட்டதாகவும் மற்ற தலைப்புகளுக்கு ஒரு ‘கட்டிடமாக’ செயல்படுவதாகவும் அவர் நம்புகிறார். இதன்மூலம், கடுமையான ரிவிஷன் திட்டம் எதுவுமின்றி எல்லா தலைப்புகளையும் எளிதாகப் பலமுறை ரிவிஷன் செய்துக் கொண்டார்.
மாணவர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அக்ஷத் சிங் அறிவுறுத்தினார். “என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை முழுமையாகப் பின்பற்றுங்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுங்கள். அவர்களின் வழிகாட்டுதலை நன்றாகப் பின்பற்றுங்கள், ஏனென்றால் நீட் தேர்வை முறியடிப்பதற்கான ஒரே வழி நிதானமாகவும், உங்களின் முயற்சிகளுக்கு இசைவாகவும் இருப்பதுதான்,” என்று அக்ஷத் சிங் கூறினார்.