NEET 2021: தேர்வு முடிவில் குளறுபடி.. ஸ்கோர் கார்டு, OMR ஷீட் மார்க் வேறுபாடால் குழப்பம்

நீட் தேர்வு முடிவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1 ஆம் தேதி வெளியானது. தற்போது, இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவில் OMR ஷீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இத்தகைய வழக்குகளின் முதல் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

வழக்கு தொடர்ந்த 6 மாணவர்கள் 2 பேர், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், ” இமெயிலில் என்டிஏ அனுப்பிய ஓஎம்ஆர் ஷீட், நொய்டாவில் உள்ள ஏஜென்சி அலுவலகத்தில் காட்டிய ஷீட்டை விட வித்தியாசமாக இருப்பதாக கூறினார்.மதிப்பெண்ணில் மிகப்பெரிய மாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டினர்.

மனுதாரர் பிரப்னூர் சிங்கின் ஓஎம்ஆர் ஷீட் மற்றும் ஆன்சர் கீ உதவியுடன் மதிப்பாய்வு செய்ததில், உத்தேச மதிப்பெண் 584 ஆகும். ஆனால், ஸ்கோர்கார்டில் வெறும் 164 மார்க் மட்டுமே பெற்றுள்ளதாக வந்துள்ளது. அதே போல், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்யன் சிங், 675 மார்க் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஸ்கோர்கார்டில் 52 மார்க் மட்டுமே பெற்றதாக வந்துள்ளது.

வழக்கு தொடர்ந்த ஆறு மனுதாரர்களைத் தவிர, மற்ற ஆர்வலர்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த 19 வயதான அன்சாரி முகமது அஸ்வான், நீட் தேர்வில் 0 மார்க் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது ஸ்கோர் கார்டைப் பார்த்து நான் அதிர்ச்சியானேன். ஓஎம்ஆர் ஷீட்டை செக் செய்கையில், அதில் எந்தொரு கேள்விக்கு பதில் செய்யாதது போல் இருந்தது. ஆனால், பல கேள்விகளுக்கு விடையளித்தேன். தோராயமாக 545 மார்க் வரும் என எதிர்பார்த்துகொண்டிருந்தேன். 2020 நீட் தேர்வில் 420 மார்க் பெற்றிருந்தேன். தேர்வு மையத்தில் என்டிஏ வழங்கிய கருப்பு பேனாவை தான் பயன்படுத்தினேன்.

ஓஎம்ஷீட்டில் பெயர், ரோல் நம்பர் போன்ற விவரங்கள் உள்ளன. ஆனால், விடை மட்டும் மார்க் செய்யவில்லை. வினாத்தாளை காலியாக விட, நான் ஏன் தேர்வு எழுத வர போகிறேன் என கூறினார்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரைச் சேர்ந்த மற்றொரு ஆர்வலர் விஸ்வநாத் குமார், கோட்டாவில் உள்ள ஒரு மையத்தில் தேர்வெழுதினார். அந்த மையத்தில் சுமார் 30 நிமிட தேர்வு நேரத்தை வீணடடித்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த மையத்தில் தேர்வு எழுதிய 25 பேர், உசச் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஸ்வநாத் குமார் கூறுகையில், ” எனக்கு 683 மார்க் கிடைத்துள்ளது. கட்ஆப் அடிப்படையில், எனது ரேங்க் 5 ஆயிரத்திற்குள் வர வேண்டும். ஆனால், 7,025 என வந்துள்ளது. போட்டி தேர்வுகளில் தரவரிசை மிகவும் முக்கியம். 5 ரேங்க் வித்தியாசத்தில் நல்ல கல்லூரியை இழந்துவிடுவோம். என் வகுப்பில் பயின்ற மற்றொரு மாணவன் 682 மார்க் பெற்றுள்ளான். அவனது தரவரிசை 5 ஆயிரத்திற்குள் வந்துள்ளது என்றார்.

என்டிஏவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் பின்பற்றும் சிஸ்டமில் தவறு வர வாய்ப்பு கிடையாது. மாணவர்கள் அழுத்தத்தின் காரணமாக, பெற்றோரிடம் தேர்வு நன்றாக எழுதியதாக பொய் செல்கின்றனர். அதனை நம்பி, பெற்றோர் வழக்கு தொடர்கின்றனர்” என்றார்.

NEET-UG 2021 இன் ஸ்கேன் செய்யப்பட்ட OMR ஷீட்களை பார்க்க விண்ணப்பதாரர்களுக்காக சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் ஒன்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neetug candidates allege discrepancies in results and omr

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com