கடலூரில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு சார்பில் கடலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான எழுத்து, பேச்சு போட்டி, ஓவியப் போட்டி மற்றும் மொபைல் புகைப்படம் எடுக்கும் போட்டி நடைபெறுகிறது.
இதில், பேச்சுப் போட்டியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே மொழித் தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கடந்த ஆண்டு வரை தமிழ் , ஆங்கிலம் , இந்தி ஆகிய மொழிகள் அனுமதிக்கப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு தமிழ் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“