CBSE New Rules for Board Exam 2019: ’பெட்டி, பார்சல் மற்றும் பாக்கெட் என மூன்றடுக்கில் பாதுகாக்கப்பட்டு கேள்வித்தால் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேதி வாரியாக, பாடம் வாரியாக கேள்வித் தாள்கள் தயார் செய்து அனுப்பப்படும். மைய கண்காணிப்பாளர் அதீத பாதுகாப்புடன், வினாத்தாள்களை பெற்றுச் செல்ல வேண்டும். மூடிய வாகனத்தில் அந்த வினாத் தாள்களை எடுத்துச் சென்று கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது சி.பி.எஸ்.இ நிர்வாகம்.
மதிப்பீடு செய்ய 12 நாட்கள்
கடந்தாண்டு நடந்த அதிகப்படியான தவறுகளைத் தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு தேர்வை மதிப்பீடு செய்ய, சீரமைக்கப்பட்ட மதிப்பீட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு குழு சிறப்பு கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் செயல்படும். இந்தக் குழுவில் ஒரு தலைமை பரிசோதகர், 3-4 உதவி தலைமை பரிசோதகர்கள் (மதிப்பீடு), 1 உதவி தலைமை பரிசோதகர் (ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் இஅடம் பெற்றிருப்பார்கள்.
நாளொன்றிற்கு ஒவ்வொரு மதிப்பீட்டாளருக்கும் 8 மணி நேரத்தில், 25 செட் பேப்பர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு உதவி தலைமை பரிசோதகரும் 4 மதிப்பீட்டாளர்களை கண்காணிக்க வேண்டும். 3 ஒருங்கிணைப்பு உதவி தலைமை பரிசோதகர்களும், மதிப்பீடு செய்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு உதவுவார்கள். உதவி தலைமை பரிசோதகரின் மதிப்பீட்டை தலைமை பரிசோதகர் மறு ஆய்வு செய்வார்.