Advertisment

வெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கல்வித் தொகை பரிந்துரைக்கிறது

author-image
WebDesk
New Update
வெளிநாட்டு பல்கலைக்கழகம்: புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

national education policy 2020:  நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல் அளித்தது. இது,  இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

Advertisment

சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் மூன்றாவது கல்விக் கொள்கையான இது, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, 1986-க்கு மாற்றாக அமைகிறது. இது, வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரைக்கிறது. புதிய சட்டம் இயற்றப்பட்டு, உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட 'வசதி' செய்யப்படும் என்றும் அது கூறுகிறது.

இது, யுபிஏ- II அரசாங்கத்தால் நகர்த்தப்பட்ட 'வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா' மீதான பாஜகவின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதால், கல்வியின் செலவு அதிகரிக்கும் (உயர் கல்விக் கட்டணம், நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தக்க வைத்துக் கொள்வது) என்று முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கொள்கையின் முக்கிய அம்சங்களாக,“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான ஒழுங்குமுறை, ஆளுகை,  மேற்பார்வை,  உள்ளடக்க விதிமுறைகள் யாவும் இந்தியாவின் பிற தன்னாட்சி நிறுவனங்களுக்கு இணையாக இருக்கும் அளவிற்கு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களைத் தாண்டி,  பன்முக, முழுமையான இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் கொண்ட நான்கு ஆண்டு இளங்கலை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) போன்ற  மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் . வெளியேறும் மாணவர்களுக்கு  முறையே அடிப்படைச் சான்றிதழ் (முதல் ஆண்டு நிறைவடைந்த)), டிப்ளோமா சான்றிதழ் (இரண்டு ஆண்டுகள்)  அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் (மூன்று ஆண்டுகள்) கிடைக்கும்

"4 ஆண்டு கல்வித்திட்ட்த்தின் கீழ், மாணவர்கள் தங்கள் முதன்மை பாடங்களில் ஆராய்ச்சித் திட்டத்தை முடித்தால், பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ்  வழங்கப்படும் ..." என்று அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

புதிய கொள்கை, ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கிறது. இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு (National Higher Education Regulatory Council), தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு (General Education Council), நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு  (Higher Education Grants Council )மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Council) .

பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ,சி.டி. இ ஆகியவற்றிற்கு மாற்றாக வரும் இந்திய உயர் கல்வி ஆணையம்  , விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றது . ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்க்கவும், ஒரு உயர் அமைப்பாக, தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment