Advertisment

NIA jobs; அரசு காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!

New India Assurance invites applications for 300 scale I officers post: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் 300 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
NIA jobs; அரசு காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு; பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் 300 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிர்வாக அலுவலர் (Administrative Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2021

நிர்வாக அலுவலர் (பொது)

மொத்த காலியிடங்கள்: 300

வயதுத் தகுதி

01-04-2021 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD  பிரிவினர் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் ரூ. 60000

விண்ணப்பக் கட்டணம்

SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 100

மற்றவர்களுக்கு ரூ. 750

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-09-2021

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிகளுக்கு https://www.newindia.co.in/portal/readMore/Recruitment என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language),  திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். இதில் முதல் பகுதியில் கொள்குறி வகை வினாக்கள் கொண்ட தேர்வு, 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 30 நிமிடங்கள்.

இரண்டாம் பகுதியில் கட்டுரை எழுதுதல் (Letter Writing-10marks & Essay-20 marks) தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment