2023ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், கூடுதலாக புதிய மருத்துவ இடங்களை ஒதுக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழத்தில் 37 அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள்,மத்திய அரசு நடத்து எய்ம்ஸ், 20 தனியார் கல்லூரிகள், 12 சுய ஆட்சி பல்கலைகழகங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரி என்று மொத்தம் 72 மருத்துவ கல்லூரிகள் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 2023 ஆண்டுக்கான மருத்துவ சீட் 11.225 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியம் கூறுகையில் “ புதிய மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள், மத்திய அரசிடம் இருந்து நிதி வந்தால் மட்டும் தொடங்க முடியும். மயிலாடுதுரை, திருபத்தூர், ராணி பேட்டை , காஞ்சிபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உருவாக இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசு நிதியில்தான் கட்டப்பட வேண்டும். 60% நிதி அவர்களிடத்திலிருந்து வர வேண்டும்.
இந்த முறை புதிதாக மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது” என்று அவர் கூறினார். பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில்தான் சேர விரும்புவார்கள். அரசு கல்லூரிகளில் 13,500 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இதுவே தனியார் கல்லூரிகளில் கிட்டதட்ட ரூ. 25 லட்சம் வரை கட்டணம் இருக்கும் வாய்ப்பிருக்கிறது.
மேலும் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் மிகவும் அதிகம் என்பதால் மாணவர்கள் அரசு கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.