NExT தேர்வு; 6500 கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு விதிமுறைகள் உருவாக்கம் – அமைச்சர்

NExT தேர்வு இந்தியாவில் பயிற்சி செய்ய மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வாக இருக்கும்; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவிப்பு

NExT தேர்வு இந்தியாவில் பயிற்சி செய்ய மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வாக இருக்கும்; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவிப்பு

author-image
WebDesk
New Update
Medical students

மருத்துவ மாணவர்கள் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்/ பிரதிநிதித்துவப் படம் - ஹர்மீத் சோதி)

ஆலோசனைச் செயல்பாட்டின் போது பெறப்பட்ட கிட்டத்தட்ட 6,500 கருத்துகளைக் கருத்தில் கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) தேசிய வெளியேறும் தேர்வு (NExT) விதிமுறைகள் உருவாக்கப்பட்டன என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

Advertisment

மாநிலங்களவை எம்.பி வைகோ கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையக் கூட்டத்தில் வரைவு விதிமுறைகள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறினார்.

இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் 2-வது ரவுண்ட்: அரசு கோட்டாவில் இன்னும் 300 இடங்கள்?

தேசிய மருத்துவ ஆணையம் NExT விதிமுறைகள், 2023ஐ, ஜூன் 27 அன்று அறிவித்தது.

Advertisment
Advertisements

"ஆலோசனை செயல்பாட்டின் போது பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான (கிட்டத்தட்ட 6,500) கருத்துகளை கருத்தில் கொண்டு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன" என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்கள் எழுப்பிய அச்சங்கள் காரணமாக, அவை கவனத்தில் கொள்ளப்பட்டு, ஜூலை 13 தேதியிட்ட பொது அறிவிப்பின்படி NExT தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

NExT தேர்வு என்பது "உயர்தர கொள்குறி வகை கேள்விகள் (MCQ) அடிப்படையிலான கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும், இது நவீன மருத்துவ முறையைப் பயிற்சி செய்யும் ஒரு மருத்துவ பட்டதாரியிடம் எதிர்பார்க்கப்படும் திறன்களுடன் இணைந்த அறிவின் உயர் களங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது."

NExT தேர்வு என்பது ஒரு மருத்துவ பட்டதாரி இந்தியாவில் நவீன மருத்துவ முறையைப் பயிற்சி செய்ய பதிவு செய்வதற்கான தகுதியை சான்றளிப்பதற்கான அடிப்படையாகும், எனவே, இது உரிமத் தேர்வாக செயல்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

NExT ஆனது பரந்த மருத்துவ சிறப்புகளில் நாட்டில் மேலும் முதுகலை மருத்துவக் கல்வியைத் தொடர விரும்புபவர்களின் சேர்க்கைக்கான தகுதி மற்றும் தரவரிசையை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாகவும் செயல்படும், எனவே, முதுகலை படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகச் செயல்படும். மேலும், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளின் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் செயல்படும், என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs Central Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: