இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
உதவித்தொகை: ரூ. 9000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.newindia.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
/indian-express-tamil/media/post_attachments/c591b65a-e43.jpg)