நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் வேலை வாய்ப்பு; 550 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
niacl jobs

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) நிர்வாக அலுவலர் (Administrative Officer) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 550 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Administrative Officer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 550

Risk Engineers - 50

Advertisment
Advertisements

கல்வித் தகுதி: Engineering  படித்திருக்க வேண்டும்.

Automobile Engineers - 75

கல்வித் தகுதி: B.E./ B.Tech./ M.E./ M.Tech in Automobile Engineering படித்திருக்க வேண்டும்.

Legal Specialists – 50

கல்வித் தகுதி: Graduate / Post Graduate in Law படித்திருக்க வேண்டும்.

Accounts Specialists – 25

கல்வித் தகுதி: Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) OR MBA Finance/ PGDM Finance/ M.Com படித்திருக்க வேண்டும்.

AO (Health) – 50

கல்வித் தகுதி: M.B.B.S / M.D. / M.S. or PG-Medical Degree Or B.D.S/ M.D.S Or BAMS/BHMS படித்திருக்க வேண்டும்.

IT Specialists – 25

கல்வித் தகுதி: B.E./ B.Tech/ M.E/ M.Tech in IT or Computer Science OR M.C.A  படித்திருக்க வேண்டும்.

Business Analysts – 75

கல்வித் தகுதி: Bachelors/ Masters degree in Statistics/ Mathematics/ Actuarial Science/ Data Science/ Business Analysts படித்திருக்க வேண்டும்.

Company Secretary - 2

கல்வித் தகுதி: ACS/ FCS from ICSI And Graduation/ Post-graduation படித்திருக்க வேண்டும்.

Actuarial Specialists - 5

கல்வித் தகுதி: Graduation/ Post-graduation in any discipline And Cleared minimum four Actuarial papers from IAI or IFoA necessarily including CM1 and not including CB3 and be an active member of IFoA or IAI படித்திருக்க வேண்டும்.

Generalist - 193

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: 90,000

தேர்வு செய்யப்படும் முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். 

முதல்நிலைத் தேர்வு: 

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

முதன்மைத் தேர்வு: 

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 30 நிமிடங்கள். 
அடுத்ததாக கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள்.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsonline.ibps.in/niacljul25/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2025

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 850, எஸ்.டி, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.100.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Jobs Insurance

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: